notification 20
Misc
கண்ணகியின் ஆசை நிறைவேறிய இடம் எது தெரியுமா? இங்கு வந்து கண்ணகி கோவலனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் உடனே நிறைவேறுமாம்!

மதுரையை எரித்தவுடன் கண்ணகி எங்கே சென்றார், அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்கிற கேள்விக்கு இன்றளவும் நிறைய பேருக்கு பதில் தெரியாது. மதுரையை எரித்தவுடன் கோவத்தில் கண்ணகி தன்னுடைய கால் போன போக்கிலேயே நடந்தார். இறுதியில் தற்போதுள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்ணாத்தி பாறை என்னும் பகுதியை வந்தடைந்தார்.

அங்கு வாழ்ந்த குறவர் இன மக்களிடம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி சொல்லி புலம்பி அழுதுவந்தார் கண்ணகி. மேலோகத்தில் இருந்து கோவலன் வந்து தன்னை அவரிடம் அழைத்து செல்லும்வரை அந்த மக்களுடன் வாழ்ந்து வந்தார் கண்ணகி. ஒரு நாள் நள்ளிரவில் தேவலோகத்தில் இருந்து சந்திரன் வழியாக கோவலன் பூமிக்கு வந்து கண்ணகியை தன்னுடன் அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அந்த நாட்டை ஆண்டுவந்த செங்குட்டுவன் என்னும் மன்னன் கண்ணகி மற்றும் கோவலனுக்காக அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பினார். கண்ணகியின் ஆசை அந்த இடத்தில் நிறைவேறியதால் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் வழிபடுபவர்களின் ஆசை உடனடியாக நிறைவேறும் என்பது ஐதீகம். கண்ணகி ஒத்தையடி பாதை வழியாக இந்த இடத்தை வந்து சேர்ந்தார். அந்த ஒத்தையடி பாதை கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இப்பவும் இந்த ஆலயத்திற்கு சென்று கண்ணகி மற்றும் கோவலனை வழிபட செல்பவர்கள் இந்த சின்கா பாதை வழியாக தான் செல்லவேண்டும். ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி மற்றும் கோவலனை தரிசனம் செய்ய பக்தர்கள் இங்கே அனுமதிக்கப்படுகிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts