notification 20
Spellbound
கமல் மோசமாக நடித்து வெளியான 8 தமிழ் படங்கள்! இரசிகர்களை பாதியிலேயே தியேட்டர் சுவர் ஏறி குதித்து எஸ்கேப்பாக வைக்கும் அளவுக்கு நடந்த சம்பவம்! இப்படியெல்லாம் நடந்திருக்கா ஆண்டவரே?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலத்தில் இருந்து இன்று வரையில் கமல் எந்த இடத்திலுமே நடிப்பில் சொதப்பியதில்லை. இருந்தாலும், ஒரு சில படங்களில், கமலின் முந்தைய நடிப்பு தரம் அளவுக்கு நடிப்பு இல்லையே எனத்தோன்றும். அந்த வகையில் சில படங்களில் மோசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் விட்டதால் அப்படி நடந்திருக்கும் எனத்தோன்றுகிறது.

கமலின் நடிப்பும், அர்ப்பணிப்பும் எந்த நடிகருடனும் ஒப்பிடமுடியாதது. அவர் பெரும்பாலும் ரசிகர்களுக்காக மட்டும் படம் பண்ணுவதில்லை. தன் திருப்திக்காகவும் படம் பண்ணுகிறார். காதலா காதலா திரைப்படத்தின் நகைச்சுவை, வேறு எந்த நடிகர்களுக்கும் பொருந்தியிருக்காது. கமலின் ரோலில் வேறு யாரையும் நினைத்தும் பார்க்கமுடியாது. அப்படி இருந்தும் கோட்டைவிட்ட 8 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

1. மன்மதன் அம்பு

எதற்காக இந்தப்படத்தில் நடித்தார் என்றே தெரியவில்லை. கிரேசி மோகன் இல்லாமல் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் இது.

2. வேட்டையாடு விளையாடு

கமல் மிகவும் மெத்தனமாக நடித்த படம். ஒரு ஈடுபாடு இல்லாமல் இருக்கும் அவரது நடிப்பு.

3. விஸ்வரூபம்-2

இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால், விஸ்வரூபம்-2 பெரும்பாலான மக்களுக்கு சுத்தமாக புரியவில்லை. 

4. மும்பை எக்ஸ்பிரஸ்

தமிழில் பிளாக் ஹுமார் முறையில் வெளியான முதல் படம். இருந்தாலும் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

5. உணர்ச்சிகள்

1976ல் வெளியான படம். திரைப்படத் தணிக்கை குழு தணிக்கை சான்றிதழ் வழங்க காலாதாமத்தினால் ரொம்ப தாமதமாக வெளியானது.

6. உத்தம வில்லன்

2015 ஆண்டு வெளியான இப்படத்திற்காக, 2014 ஆம் ஆண்டே கதைக்குப் பொருந்தும் வகையில் கமலஹாசனுக்கு ஒப்பனைகள் செய்து பார்க்கப்பட்டது. அதிலும் பல சர்ச்சைகளை சந்திக்க வேண்டியதாகிற்று.

7. அந்த ஒரு நிமிடம்

1985 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சராசரியான வரவேற்பைப் பெற்றது. கொஞ்சம் இரசிகர்கள் எதிர்பார்த்த நடிப்பை கமல் வெளிப்படுத்தவில்லை.

8. மங்கம்மா சபதம்

சத்யராஜ் மற்றும் கமல் நடிப்பில் இதுவும் 1985 ஆம் ஆண்டு வெளியான படம். கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்த போதிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை.

இவையெல்லாம் கமல் சொதப்பிய சில படங்கள் மட்டுமே. மீதிப்படங்களில் அபாரமான நடிப்பின் வெளிப்பாடு இருக்கும். கே.எஸ்.ரவிக்குமார் முதலான இயக்குநர்களுடன் இணைந்து வணிக நோக்கப் படங்களை தரத்துவங்கிய பின்னர், தரம் குறைந்த நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் சமரசம் செய்து கொண்ட படங்களையே தருகிறார். இது தவிர வேறு ஏதாவது படங்கள் இருந்தாலும், கீழே பகிரலாம்.

 

 

 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts