notification 20
Out of Box
என்ன ஆச்சு நம்ம ஜானி டெப்புக்கு? கொஞ்ச நாட்களாகவே அவரை திரையில் பார்க்க முடிவதில்லையே?

ஜானி டெப்ன்னு சொன்னா யாருக்கும் அவரை அடையாளம் தெரியாது. jacks sparrow என்று சொன்னால் தான் அவர் யார் என்று தெரியும். ஆமாங்க நம்ம இப்ப பேசப்போறது கடற்கொள்ளை தலைவன் jacks sparrow பற்றித்தான். இவர் நடிப்பில் கடைசியாக கரீபியன் கல்லறை தீவு படத்தின் இறுதி பாகம் தான் வெளிவந்தது. இதற்கு பிறகு வரும் கரீபியன் கல்லறை தீவு படங்களில் இவர் நடிக்க மாட்டார் என்கிற செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தன.

கரீபியன் படங்கள் மட்டுமல்லாது இவர் இனி எந்த ஹாலிவுட் படத்திலும் நடிக்க மாட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. காரணம் இவர் ஒரு மோசமான சைக்கோ என்றும், இவருடைய மனைவியை இவர் மிகவும் மோசமாக தாக்கினார் என்றும், மனைவியின் பி றப்புறுப்பில் மது பாட்டிலை நுழைத்து அவரை கொ டுமைப்படுத்தினார் என்றும் சொல்லி ஜானி டெப்பின் மனைவி இவர் மீது கு ற்றம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

உண்மையிலேயே இவர் மிகப்பெரிய சைக்கோ தான் போல என்று நினைத்து இவர் கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்து இவரை கழட்டி விட ஆரம்பித்தனர். படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். இவருடையாய் மனைவியை விவாகரத்து செய்யும் நேரத்தில் மனைவிக்கு 7 மில்லியன் டாலர் வழங்கினார். அந்த 7 மில்லியன் டாலர் பணத்தில் பாதி பணத்தை அனாதை ஆசிரமத்திற்கு தருவதாக இவர் மனைவி அம்பர் ஹெர்ட் உறுதி அளித்திருந்தார்.

ஆனால் காசு கைக்கு வந்தவுடன் அந்த உறுதிமொழியை மறந்துவிட்டு எல்லா பணத்தையும் அம்பர் ஹெர்ட் தண்ணி மாதிரி செலவு பண்ணிவிட்டார். அதுமட்டுமல்லாமல் ஜானி டெப்புடன் இருந்த காலத்தில் அவருடைய பாதி சொத்துக்களை தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்து அழித்திருக்கிறார். ஜானி டெப்பை  விவகாரத்து செய்த நேரத்தில் இவருடைய முகத்தில் நிறைய காயங்களை ஜானி டெப் ஏற்படுத்தி கொ டுமை படுத்தினார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் அவரின் முகத்தை பரிசோதித்த மருத்துவர் தற்போது உண்மை நிலையை விளக்கியுள்ளார். எல்லாம் மேக் அப் போட்டு இவரே செயற்கையாக உருவாக்கிய காயங்கள் தான் என்று நீதிமன்றத்தில் சாட்சி சொல்லியுள்ளார். அதேபோல ஜானி டெப் மீது சுமத்தப்பட்ட பாதிக்கு மேலான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. உண்மை ஒரு நாள் வெல்லும், என்ன அதுக்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கும், அவ்வளவு தான்.

பு ற்றுநோ யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஜானி டெப்பை சந்திக்க வேண்டும் என்று சொன்ன போது அந்த குழந்தைகளை பார்ப்பதற்காக jacks sparrow வேடத்தில் மேக்அப் போட்டு நிறைய முறை சென்று அந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய மனுசனா இப்படி எல்லாம் பண்ணி இருப்பார். உண்மை நிச்சயம் வெல்லும், இப்போது உண்மை வென்றுவிட்டது. தற்போது ஜானி டெப்பின் முகத்தில் அடிக்கடி சிரிப்பை பார்க்க முடிகிறது. மீண்டும் அவரை பழைய மாதிரி சினிமாவில் விரைவில் பார்க்கலாம் என்று ஹாலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts