பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். அதேபோல அவனியாபுரம், பாலமேடு மற்றும் பல மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு பீட்டா உள்ளிட்ட சில விலங்குகள் நல அமைப்புக்ள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அந்த விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் குறைந்தபாடில்லை.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளது. பல தடைகளை தாண்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதால் மீண்டும் அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மட்டுன்றி வேறு சில விஷயங்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.