notification 20
Hugs & Kisses
பெண்களுக்கு பிடித்த ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களாம்! தனித்து தெரிய இப்படி ஏதாவது செய்து தான் ஆக வேண்டுமே!

ஒரு ஆண் எப்படி இருந்தால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்? அழகா இருக்கணும், என்ன சுத்தி சுத்தி வரணும், கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கணும், திட்டகூடாது, வீட்டு வேலையும் செய்யணும்.  இப்படி இருக்கும் ஒரு ஆணை தான் பெண்கள் விரும்புவார்கள் என்பதெல்லாம் சினிமாக்களிலும் தொடர்களிலும் காட்டப்படும் போலியான எதிர்பார்ப்புகள். இப்படியெல்லாம் யாராலும் இருக்க முடியாது, அப்படி இருந்தாலும் அது அந்த ஆணுக்கு நிம்மதியை தராது. உண்மையில் ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது என்ன? என்பதை பலரும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு கண்ணியமான பெண் தனக்கு வரப்போகும் ஆணிடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பால் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் மரியாதை. ஒரு பெண்ணிற்கு அவளுக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதையை ஒரு ஆண் கொடுத்தாலே அவன் மீது மரியாதை உண்டாகிவிடும். இதற்காக அவர்களை விழுந்து விழுந்து கவனிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு ஆணுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களுக்கும் கொடுத்தாலே போதும். அடுத்து கண்ணியமான பார்வை. தவறாக பார்க்கும் ஆண்களை ஒருபோதும் பெண்கள் மதிக்க மாட்டார்கள். அவர்களின் கண்களை மட்டுமே பார்த்து பேசும் ஆண்களிடமே முதலில் பேச எண்ணுவார்கள்.

அடுத்து அனைத்து பெண்களிடமும் எந்த ஒரு உள்நோக்கமும் இன்றி தேவையான காரணங்களுக்கு மட்டுமே பேசும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் இப்படிப்பட்ட ஆண்கள் ஒருபோதும் மனைவிக்கு து ரோகம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் ஆணித்தரமாக இருக்கும். இதைத்தவிர அனைத்து பெண்களிடமும் வழிந்து பேசும் ஆண்களை ஒருபோதும் பெண்களுக்கு பிடிக்காது. கண்ணியமான ஆண்களை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு தைரியமான ஆண்களையும் பிடிக்கும். எந்த ஒரு இடத்திலும் தன்னை காப்பாற்றும் தைரியமுள்ள, தேவையான நேரத்தில் தனது உரிமையை கேட்கும் ஆண்கள் எப்பொழுதும் பெண்களுக்கு ஒரு ஹீரோ தான். 

மிக முக்கியமானது பொதுவுடைமை. உதாரணமாக, நான் ஒரு பேருந்தில் செல்லும்போது திடீரென பேருந்து நின்றுவிட்டது. நடத்துனர் ஒரு பத்து பேர் வந்து பேருந்தை தள்ள உதவுமாறு கூறினார். ஆனால் தன்னுடைய சீட் போய்விடும் என யாருமே எழுந்திருக்கவில்லை. அப்பொழுது ஒருவர் மட்டும் எழுந்து பேருந்தை தள்ள சென்றார். அவரை பார்த்து மற்றவர்களும் சென்றார்கள். அந்த நேரத்தில் அவர் கண்ணுக்கு ஒரு ஹீரோ போல தெரிந்தார். ஆனால் பண விஷயத்தில் நீங்கள் ரொம்ப பொதுவுடைமையாய் இருந்தால் உங்கள் மனைவியிடம் திட்டு தான் வாங்குவீர்கள். மொத்தத்தில் அழகையும், பணத்தையும் விட கண்ணியமான நம்பிக்கையுள்ள ஆண்களைத்தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குங்க!

Share This Story

Written by

Akila View All Posts