2001ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழன். இந்த திரைப்படத்திற்கு முதன்முதலில் டி இமான் இசை அமைத்தார். இந்த படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில பாடல்களில் ஹிட் கொடுத்து வந்தார்.
பல்வேறு வெற்றிகளை தொடர்ந்து டிக் டிக் டிக் படத்தில் இசை அமைத்ததன் மூலம் 100 படங்களை நிறைவுசெய்து செஞ்சுரி அடித்தார். இசையமைப்பாளர் இமான் மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் கலை இயக்குனரின் மகள் அமலியை மறுமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு தனது இரு மகள்களும் திருமணத்தில் கலந்து கொள்ளாததற்கு தான் வருந்துவதாகவும், விரைவில் அவர்கள் என்னிடம் வருவார்கள் என நான் காத்திருக்கிறேன் எனவும், மறுமணம் செய்த மனைவி அமலியின் மகள் நேத்ராவை தான் தனது மூன்றாவது மகள் போல பார்த்துக் கொள்வேன் எனவும் பதிவிட்டிருந்தார்.
தற்போது இமானின் முதல் மனைவியான மோனிகா இமானை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இமானின் மறுமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறியும் திருமண வாழ்வில் இணைந்து 12 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த ஒருவரை எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இது போன்ற ஒருவருடன் தான் முட்டாள்தனமாக இத்தனை காலமாக சேர்ந்து வாழ்ந்து தனது நாட்களை வீணாக்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். கணவன் துணை இல்லாமல் இவ்வுலகில் வாழும் பெண்கள் பலசாலிகள் எனவும் தன்னுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக தன்னால் வளர்க்க முடியும் எனவும் பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.