Spellbound

க ருவிலே இ*றந்துபோனதோ என கலங்கிய தம்பதிகளுக்கு இளையராஜா நிகழ்த்தி கொடுத்த அற்புதம்! பெண்ணின் க*ருவில் இருந்த குழந்தை ஏன் இவருக்கு சமிக்கை காட்ட வேண்டும்? கொஞ்ச நேரம் இளையராஜாவே ஆடிப்போன சம்பவம்!

Mar 05 2022 02:32:00 PM

இசையால்  இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியுமா? என வியக்கும் அளவுக்கு இசை சில மாயாஜால நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது. அக்பரது அவையில் இருந்த தான்சேன் என்ற  இசைக்கலைஞர் தீப ராகம் பாடி விளக்கு ஏற்றியதாக செய்திகள் உண்டு. இந்த காலத்தில் தான்சேன் அவர்களே நேரில் வந்து பாடல் பாடி விளக்கு ஏற்றினால் தான் நம்புவார்கள். மேலும் இவர் நாட்டிற்கு மழை பெய்ய வேண்டி, பாடியே மழையை மண்ணிற்கு வரவழைப்பாராம். 

ilaiyaraaja yuvan-shankar-raja

ஏன் நம்ம இளையராஜா அவர்கள் அமிர்தவர்ஷினி ராகத்தில் 'தூங்காத விழிகள் இரண்டு' என்ற பாடலுக்கு இசையமைத்து விட்டு வெளியே வருகையில் மழை கொட்டி தீர்த்ததாம். பொதுவாக அமிர்தவர்ஷினி ராகத்தை யாரவது இசைக்க நேரிட்டால் மழையே மண்ணுக்கு வந்து அந்த ராகத்தை கேட்டு வியந்து நிற்கும் என சொல்வதுண்டு. வெறும் பேச்சிற்கு சொல்வதல்ல உண்மையாகவே இசைக்கு சக்தி உள்ளது.

ilaiyaraaja yuvan-shankar-raja

ரோம் நகரம் தீப்பிடித்து எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என கேள்விபட்டிருப்போம். அந்த காலத்தில் நாம் வாழவில்லை. மழையை வரவழைத்து தீயை அணைக்க கூட முயற்சி செய்திருக்கலாம். ஆனால் சுயநினைவோடு இருக்கும் எந்த மனிதனாவது நாடு தீப்பற்றி எரியும்போது, பிடில் வாசிப்பானா? அவர் நாட்டின் மன்னன். அந்த நேரத்தில் வாசித்துள்ளார் என்றால் காரணம் இல்லாமலா இருக்கும்? நாமும் சமந்தமில்லாத விஷயத்தை யாரேனும் செய்தால் 'ரோம் நகரம் தீப்பிடித்து எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்தான்' என்பதை போல நீயும் சமந்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறாய் என உதாரணம் காட்டி பேசுவோம். நீரோ மன்னன் பிடில் வாசித்த காரணம் அவருக்கு தான் தெரியும். 

ilaiyaraaja yuvan-shankar-raja

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் தந்தை ம ரண படுக்கையில் இருக்கும்போது, அவரது நினைவில் அவரது முன்னோர்கள் வந்து அவரை வரவேற்பது போலவும், அப்போது ஏதோ மூலையில் இருந்து ஒரு கர்னாடக இசை இவருக்கு ஆரவாரம் செய்வது போல ஒலித்ததாகவும், எங்கிருந்து அந்த இசை வருகிறது என தேடுகையில் கண் விழிப்பு வந்ததாக கூறியுள்ளார் . பார்த்தால் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தந்தை கேட்ட அதே ராகத்தை நேரில் வாசித்துக்கொண்டிருந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அவரே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது ம ரண படுக்கையில் இருந்து குன்னக்குடி வைத்தியநாதனின் தந்தையை மீட்டது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் மீட்டிய இசை . 

ilaiyaraaja yuvan-shankar-raja

TMS பாடிய 'இசையால் வசியமாகா இதயம் எது? இறைவனே இசை வடிவம் எனும்போது' இந்த பாடலை கேட்கும்போது கூட இசைக்கு ஏதோ ஒரு வசிய சக்தி உள்ளது என்பது புரியும். அதனால் தான் மனம் சோர்வாக இருக்கும்போது, சிலர் இசை கேட்கிறார்கள். பின்னர் மீண்டும் பிறந்தது போல புத்துணர்வு பெறுகிறார்கள். 

ilaiyaraaja yuvan-shankar-raja

அடுத்த உண்மையான நிகழ்வு, 12 வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் வசித்த தம்பதியர்கள் இளையராஜா அவர்கள் இசையமைத்த திருவாசகம் தங்களது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்கள். தன்னுடைய மனைவியின் கருவில் இருந்த குழந்தை அசையவில்லை என ம ருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதனால் மனமுடைந்து, செய்வது அறியாது வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த தம்பதிகள், இளையராஜா அவர்கள் இசையமைத்த திருவாசகம் பாடலை கேட்டு கொண்டிருந்த போது, குழந்தை அசைவை காட்டி தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்கள். இதை கேட்டு ம ருத்துவர்கள், இத்தனை நாளாக அசையாத குழந்தை இப்போது எப்படி அசைந்தது என வியந்துள்ளனர். இதை கேட்டு இளையராஜாவும் வியந்துள்ளார்.  

ilaiyaraaja yuvan-shankar-raja

இவற்றை கேள்விப்படும்போது, முன்னர் ஒரு காலத்தில் கூறப்பட்ட 'இசையால் தீராத நோ யை கூட குணப்படுத்த முடியும், ஊமையை பேச வைக்க முடியும், வறண்ட பூமியை பசுமையாக மாற்றமுடியும்' என கூறப்பட்ட செய்திகள் எல்லாம் உண்மை என்றுதான் தோன்றுகிறது. நாம் தான் நமது முன்னோர்களிடம் இருந்து இந்த வித்தைகளை கற்றுக்கொள்ளவில்லையோ?