notification 20
Misc
யாரெல்லாம் இன்னும் யூஸ் பண்றீங்க? இந்த சோப் பற்றிய உண்மை தெரிந்தால், மற்ற எல்லா சோப் கம்பெனிகளும் இழுத்து மூட வேண்டிய நிலை வரும்!

எனக்கு அடிக்கடி தோல் வறண்டு விடும். அப்போது தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்வேன். கொஞ்ச நாள் போகப்போக ரொம்பவும் வறண்டு போக ஆரம்பித்தது. ஒருமுறை தோல் டாக்டரிடம் காட்டி கேட்டதற்கு, உங்க சோப்பில் தான் பிரச்சனை, தோலில் உள்ள எண்ணெய் பசை முழுக்க உறிஞ்சுவது போன்ற குணங்களை கொண்டுள்ளது. TFM 76 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள சோப்பு வாங்கி போட்டால் சரியாகும் என்று சொன்னார்.  TFM என்றால், Total Fatty Matter. 

அதாவது சோப்பில் உள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவாகும். அதனை வைத்தே சோப்பின் தரம் அறியப்படுகிறது. அதிலும் பல கிரேடுகளாக வகைப்படுத்தி இருப்பாங்க. 76க்கு மேல் இருந்தால் முதல் தரம். 70 முதல் 76 வரை இருந்தால் அது இரண்டாம் தரம். 60 இருந்தால் அது மூன்றாம் தர சோப். எனக்கு தெரிந்த வரையில் மைசூர் சாண்டல் சோப்பில் 80 சதவிகிதம் இருப்பதாக சொல்றாங்க. 76 இருந்தாலே முதல் தர சோப் என்கிறார்கள். அப்போ 80 என்றால், அதுக்கும் மேலே. 

மைசூர் சாண்டல் உருண்டை கரைய ஆரம்பிக்கவே ஒரு வாரம் ஆகும். 125 கிராம் சோப்பு தாராளமாக ஒரு மாதம் வரும்.  நான் அனைத்து சோப்பையும் பயன்படுத்தி இருக்கிறேன். சமீபத்தில் ஹேர்பல் சோப்பு கூட உபயோகப்படுத்தி இருக்கிறேன். தொடக்கத்தில் நன்றாக இருக்கும். பின் தரம் போகப்போக குறைந்து ஒரு பைசாக்கு கூட பிரயோஜனம் இல்லாத மாதிரியாகிவிடும்.  ஆனால் அன்றும் இன்றும் மைசூர் சாண்டல் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

இந்த சோப்பை பல வருடங்களாக நான் பயன்படுத்தி வருகிறேன். வேறு சோப் மாற்றும் எண்ணமே இன்னும் வரவில்லை. ஜான்சன் பேபி சோப்பை முகத்துக்கு போடக்கூட பலமுறை யோசித்து இருக்கிறேன். மைசூர் சாண்டல் சோப், எல்லாவிதத்திலும் பாதுகாப்பானதாக தெரிகிறது. எங்கள் வீட்டில் இது நாள் வரைக்கும் வேறு சோப் மாற்றியதில்லை. உங்கள் வீட்டில் எப்படி? என்ன மாதிரியான சோப் பயன்படுத்துறீங்க? ஏதாவது வித்தியாசமான அனுபவம் இருக்கா? 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts