Misc

கோவிலுக்கு வெளியே வரும்போது, பிச்சை போட கூடாது! உள்ளே செல்லும்போது தான் பர்ஸை திறக்க வேண்டும்! கடவுளிடம் வேண்டிய அத்தனையும் ஒரே ரூபாயில் உங்க கையை விட்டு ஓடிவிடும்!

Mar 01 2022 12:29:00 AM

கோவிலுக்கு உள்ளே சென்றுவிட்டு சாமியை வணங்கிவிட்டு திரும்பி வரும்போது, யாசகம் கேட்பவர்களுக்கு பிச்சை போடக்கூடாது என்பார்கள் ஏன் தெரியுமா? இதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணம் என்னவென்றால், அதாவது கோவிலுக்குள் உள்ளே சென்று சாமியிடம் அது வேண்டும் இது வேண்டும் என கேட்கிறோம். கேட்ட வேண்டுதல்களை கோவிலை விட்டு செல்லும் முன்னரே கடவுள் நமக்கு கொடுத்தும் விடுவார் என்பது ஐதீகம். அப்படி அவர் கொடுக்கும் வரத்தை நாம் நேராக வீட்டிற்கு தான் எடுத்த செல்ல வேண்டுமே தவிர, வழியில் யார் கேட்டாலும் கொடுத்துவிட கூடாது. சிலர் நம்மிடம் யாசகம் கேட்கலாம், இல்லை வழியே செல்லும்போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் நம்மை மறித்து பேசிக்கொண்டே 'பணம் நூறு ரூபாய் கடன் கொடு' என கேட்கலாம். இப்படி கோவிலில் இருந்து வீடு செல்வதற்குள் யாராவது ஏதாவது கேட்டால் கொடுத்து விட கூடாது. அப்படி கொடுத்தால் கடவுள் கொடுத்த வரனை திருப்பி இன்னொருவருக்கு நாம் கொடுப்பது போல ஆகிவிடும். 

tiruvannamalai tiruvannamalai-girivalam

அதனால் தான் ஆன்மீக ரீதியாக, பிச்சை போடுவதாக இருந்தால் கோவிலுக்கு செல்லும் முன்னரே போட்டுவிட வேண்டும். சாமியை கும்பிட்டு வந்த பிறகு பிச்சை போடக்கூடாது. இதற்கு இன்னொரு விளக்கமும் உள்ளது. அதாவது கோவிலுக்குள் செல்லும் முன்னரே பிச்சை  போடுவது  யாசகம் கேட்பவர்களுக்கு உடனடியாக திருப்தியை கொடுத்துவிடும். பிச்சைக்காரன் படத்தில் வருவது போல், கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் ஆண்டனியிடம் பிச்சைக்காரர் ஒருவர் தொடர்ந்து பிச்சை கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் விஜய் ஆண்டனி பிசியாக போனில் பேசிக்கொண்டு இருப்பார். பின்னர் விஜய் ஆண்டனியின் அம்மா சொல்வார், 'யாரையும் காக்க வைக்காதே, உன்னிடம் இருந்தால் கொடு  இல்லையென்றால் இல்லை என சொல்லிவிடு' என்பார்

tiruvannamalai tiruvannamalai-girivalam

அவ்வாறே ஆன்மீக ரீதியாகவும் ஒருவரை காக்க வைப்பது என்பது கூடாது. காக்க வைத்து பிச்சை போடுவது புண்ணியம் ஆகாது.  எதிர்பாராமல் ஒருவர் கேட்காமலே அவர் வேண்டியதை அறிந்து, முன்னரே அவருக்கு உதவுவது தான் புண்ணியம் என்கிறார்கள். அதே போல பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வரும்போது, மலைப்படிவாரத்தில் நிறைய சாதுக்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் வெறுமென கம்பீரமாக நமச்சிவாய என கூறி பிச்சை கேட்பார்கள். பக்தர்கள் சிலர், இவர்கள் சா பம் ஏதாவது விட்டுவிட போகிறார்கள் என்று பயந்து பிச்சை போடுவதுண்டு. மலையை சுற்றும் போது தான் உண்மை தெரியும். கைகால்கள் நன்றாக உள்ளவர்கள் கிரிவலத்தின் ஆரம்பத்திலே, இருக்கும் காசை பிச்சையாக கேட்டு வாங்கி கொள்வார்கள். அதுவும் அவர்களுக்கு கோவிலில் இருந்து உணவு, உடை கொடுக்கப்படும். யாசகம் கேட்பது மேற்செலவிற்காக!

tiruvannamalai tiruvannamalai-girivalam

மலையின் உள்ளே செல்ல செல்ல கைகால்கள் இல்லாதவர்கள், கண்கள் இல்லாதவர்கள் என நிறைய முதியவகர்கள், யார் அவர்களை கடந்து செல்கிறார்கள் என்று கூட தெரியாமல் கிடப்பார்கள். உதவுவதாக இருந்தால் இப்படி உள்ளவர்களுக்கு உதவுவது தான் சரியே. அதுவே பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பதன் சாராம்சம். எப்படி பிச்சை இட்டாலும் சரி ஆண்டவனை தரிசிக்கும் முன்னரே பிச்சை போடுவது சரியனது. அதற்கு பின்னர் போடக்கூடாதா என்றால், மிகவும் கஷ்டமான சூழலில் உள்ளவர்களை பார்த்தால் உதவுங்கள். உங்களது உதவியில் மனமுருகி கூட ஆண்டவன் வரத்தை அள்ளித்தர வாய்ப்புள்ளது. மனம் தானே எல்லாம்?