notification 20
His & Her
டாம்பாய் குணம் கொண்ட பெண்கள், ஆண்களிடம் எப்படி பழகுவார்கள்? இந்த மாதிரியான பெண்களை எப்படி அடையாளம் காண்பது? இப்படி ஒரு கேரக்டர் உங்கள சுத்திக்கூட இருக்கலாம்!

ஒரு வாலிப ஆணைப்போல நடை, உடை பாவனைகளுடன் நடமாடும் இளம் பெண்களை டாம்பாய் (Tomboy) என்று அழைப்பார்கள். இவர்கள் தன் ஒத்த வயதுள்ள ஆண் நண்பர்களுடன் மிகவும் சகஜமாகப் பழகுவார்கள். என் அக்கா மகள் ஒரு டாம்பாய்தான். 135CC பைக்கை லைசென்ஸ் வாங்க ஓட்டிச்சென்று, சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியபோது பலர் வியப்படைந்தார்களாம். ஏனெனில் அவள் ரொம்ப ஒல்லி, ஆனால் உயரம். இப்போ புல்லட் வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

என்னை அடிக்கடி கோவை வரும்படி அழைத்துக்கொண்டே இருக்கிறாள். அங்கே போனதும், பைக்கில் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஊர் சுற்றவேண்டுமாம். அவளுடைய வேகத்தை நினைத்தாலே குலை நடுங்குகிறது. அந்தக்காலம் மாதிரி இல்லை. இப்ப பொண்ணுங்க நல்லாவே வண்டி ஓட்டுகிறார்கள். டாம்பாய் குணம் கொண்ட பெண்கள் செய்யும் செயல்கள் எல்லாமே ஆண்களைப்போல இருக்கும். இதற்காக அவர்களிடம் பெண்மைத்தன்மை இல்லையென நினைத்துவிட வேண்டாம்.

கல்யாண வயது வந்தவுடன் அது தானாகவே மறைந்துவிடும். டாம்பாய் பெண்களுக்கென்று ஒரு தனி வசீகரம் உண்டு. டீன் ஏஜ் பருவத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களை டாம்பாயாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் அதற்கு முன்பே, சில இடங்களில் அந்தக்குணம் வெளிப்படும். ஆனால் வயது குறைந்த குழந்தையாக இருப்பதால் வித்தியாசம் தெரியாது. தற்போதைய காலகட்டத்தில் நிறைய பெண்கள் தங்களை டாம்பாயாக நினைக்கின்றனர்.

அப்படி நினைக்கும் எல்லோருக்குமே அந்த குணம் வந்துவிடாது. அது பிறப்பிலேயே வரக்கூடியது. இப்படிப்பட்ட டாம்பாய் குணத்தை ஒரு பாலியல் ரீதியிலான குறைபாடாகவோ அல்லது பெண்மையை இழந்த ஒரு தன்மையாகவோ பார்க்க வேண்டியதில்லை. வயது மாற மாற அந்த குணங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். டாம்பாய் குணம் இருக்கும் வரையில், பைக் ஓட்டுவது, விசில் அடிப்பது, கத்துவது போன்ற இன்னும் பல செயல்களை கூச்சமின்றி சர்வசாதாரணமாக செய்வார்கள். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts