ஒரு சிலர் நடந்துகொள்வதைப்பார்த்தால், இவனெல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்? என பெரியவங்க சொல்வாங்க. அவங்க சொல்வதற்கு ஏற்பத்தான் இப்போதைய வயசு பசங்க நடந்துகொள்கின்றனர். பசங்கன்னு இல்ல, பெண்களும் சிலர் அப்படித்தான் இருக்காங்க. அப்படி என்ன மாதிரியான முட்டாள்தனமான காரியங்கள் செய்யிறாங்க என்ற பட்டியலை அடுத்து பார்க்கலாம்.
1. நம்மவர்கள் கழிப்பறையை உபயோகப்படுத்தும் முறையும் ,அதை சுத்தம் செய்ய பணியாளர்கள் படும் அவதியும் மிகுந்த வருத்தம் உண்டாக்கும்.
2. சிக்னலில் பச்சை விளக்கு வருவதற்கு முன்பே ஹாரன் அடிப்பவர்களை என்ன சொல்வது? கடுப்பாகிவிடும்.
3. பைக் ஓட்டும்போது தலையைச் சாய்த்து போன் பேசுபவர்களை சொல்ல வேண்டும். அதுவும் மிக நெரிசலான சாலையில் பல வாகனங்களுக்கு இடையில் வண்டியை ஓட்டுவது எரிச்சலை ஊட்டுகிறது.
4. எந்நேரமும் கைபேசியை பார்த்துக்கொண்டே நடக்கும் மனிதர்களும், காதில் ஹெட்போனுடம் சுற்றுபவர்களும் முட்டாள்களே.
5. சில ஆண்கள் கையை வீசி நடப்பார்கள். அவர்களது கை பக்கத்தில் வரும் பெண்களை தவறான இடத்தில தொடுவார்கள். அதர்காகவே கை வீசுவோரும் உண்டு.
6. கூட்டம் நிறைந்த பேருந்தில் ஏறிய பின்னரும் முதுகில் உள்ள பேக்கை கழற்ற மாட்டாங்க. பின்னால் நிற்பவர்களுக்கு அது எவ்வளோ சிரமம் என்பதை, ஒருமுறை இடி வாங்கினால் தெரிந்துகொள்வார்கள்.
7. பக்கத்துவீட்டு மரத்தின் இலைகள் விழுந்தால், அவரோடு சண்டை போட்டு மரத்தை வெட்ட சொல்லும்போது அவர்கள் மகாமுட்டாளாக தெரிவார்கள்.
8. ஊரெல்லாம் நாறடித்துவிட்டு, மாதம் ஒருமுறை தொண்டு நிறுவனத்துடன் சென்று ஊரை சுத்தம் செய்வது போல போட்டோ எடுத்துக்கொள்வது. இதுவரைக்கும் சொன்னது எல்லாம் சின்ன உதாரணம் தான். இன்னும் பல முட்டாள்கள் லிஸ்ட்டில் இருக்காங்க. உங்கள் கை வசமும் ஏதாவது இருக்கிறதா?