HotPicks

கரண்ட் ஷாக் அடிக்கும் போது, எல்லோரும் இறப்பது ஏன்? உண்மையிலேயே அப்போது உடம்புக்குள் இது தான் நடக்கிறதாம்! உயிர் தப்பி பிழைத்து வந்தவர் சொன்ன ரகசியம்!

May 10 2022 11:48:00 AM

கரண்ட் ஷாக் அடிப்பதில் பல வகை உண்டு. மின்சாரம் தாக்கியது என்ற செய்தியை படித்த உடனே, அதனை ஒரு விபத்து போல நினைத்துக்கொள்கிறோம். நிஜத்தில் மின்சாரம் நம்முடைய உடலின் வழியே பாய்கிறது அவ்வளவு தான். அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடலுக்குள் நிகழும் மாற்றங்களால் இறப்பு உண்டாகிறது. சொல்லப்போனால், நம்முடைய இதயம் கூட, மின் சக்தியால் தான் துடிக்கிறது. உடலுக்கு தேவையான மின்சக்தி நம்முடைய உடலிலேயே தயாராகும். 

shock current electric

இப்போது ஒருவரை மின்சாரம் தாக்கும் போது, முதலில் இதயத்துடிப்பு தடைபடும். அளவுக்கு அதிகமான மின்சாரம், இதயத்தை துடிக்க வைக்கும் மின் சக்தியோடு சேர்ந்து, இயக்கத்தை தாறுமாறாக மாற்றிவிடும். இதயத்தின் செயல்பாடு நின்று போனதும், மூளையின் செயல்பாடும் நின்றுவிடும். ஒரு சிலர் ஷாக் அடித்த உடனே பேச்சு மூச்சு இன்றி இருப்பாங்க. அவங்களுக்கு தற்காலிகமாக இதயம் நின்றிருக்கும். அவர்களுக்கு உடனே முதலுதவி செய்தால், மூளை செயலிழப்பு ஏற்படும் முன்னர் காப்பாற்றி விட முடியும். 

shock current electric

அதுவே உயர்அழுத்த மின்சாரம் மனித உடல் வழியாக பாயும் பொழுது, உடல் கடுமையாக சூடாகும். நன்றாக தரையுடன் இணைப்பு கிடைத்தால், உடல் தீப்பிடித்து எரியும். அப்போது ஒருவர் காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு. ஒரு சிலர் ரப்பர் செருப்பு போட்டு வேலை செய்தால் ஷாக் அடிக்காதுன்னு சொல்லுவாங்க. மின்சார சாதனங்களில் வேலை செய்த அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே அப்படி செய்வாங்க. மற்றவர்கள் முயற்சிக்க கூடாது. 

shock current electric

யார் பேச்சையும் கேட்காமல் என்னுடைய தம்பி, செருப்பு போட்டு வெயரை தொட்டால் ஒன்றும் ஆகாதுன்னு சொல்லி என்னவோ செய்தான். திடீரென மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தான். எக்காரணத்தை கொண்டும் மின்சாரத்தில் விளையாட வேண்டாம். நல்ல அனுபவம் கொண்டவர்களையே சில நேரங்களில் ஏமாற்றிவிடும்.