Out of Box

யாரோ என்னமோ பண்ணட்டும் நீ ரசத்த ஊத்து தாயி! பார்லிமென்டில் ஒரு எம்.பி பண்ற வேலையா இது? இப்போ புரியும் காங்கிரஸ் ஏன் மண்ணைக் கவ்விக்கொண்டு போகுதுன்னு!

Apr 06 2022 09:07:00 PM

எல்லா நாடுகளிலும் இந்த பார்லிமென்ட் சமாச்சாரம் மட்டும் ஓய்வதில்லை. சட்டம் இயற்ற வேண்டிய நேரத்தில் தூங்குவது, அருகில் உள்ள சக அரசியல்வாதிகளுடன் பேசிக்கொண்டிருப்பது, கிளுகிளுப்பான வீடியோக்கள் பார்ப்பது என மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்துக்கொண்டே நல்லா ஜமாய்கிறாங்க. இதற்கு இந்திய பார்லிமென்ட் மட்டும் விதிவிலக்கா என்ன? இங்கே அதற்கு மேலேயும் பண்ணுவோம் என ரத்தினச் சுருக்கமாக ஒரே செய்கையில் உணர்த்திவிட்டார் காங்கிரஸ் எம்.பி சசிதரூர். 

mp-parliament sasitharoor congress

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட காங்கிரஸ் கட்சி, இன்னைக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாமல் திணறுகிறது. தமிழகத்திலும் ராஜா மாதிரி இருந்த கட்சி, இன்னைக்கு மாநில கட்சியிடம் சொற்ப சீட்டுகளுக்கு கெஞ்சிட்டு இருக்கு. இதற்கெல்லாம் காரணம், இப்படிப்பட்ட மூத்த தலைவர்கள் இருப்பதால் தான் என எனக்குத் தோணுது. பார்லிமென்ட்டுக்குன்னு ஒரு மாண்பு இருக்கு. அதற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். 

mp-parliament sasitharoor congress

போய் பழக்கப்பட்ட இடம் தானே என்று, மாமியார் வீட்டுக்கு செல்வது போன்ற நினைப்பில் அசடு வழிந்து சென்றால், இந்த மாதிரி பல காட்சிகளை இனி வரும் காலங்களில் பார்க்கலாம். ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பற்றி சர்ச்சை ஊர் முழுக்க பரவிக்கிடக்கு. இந்த நேரத்தில், பார்லிமென்டில் அமைச்சர் பேசுவதை கவனிக்காமல், சக பெண் எம்.பி-யிடம் டேபிளில் படுத்தவாறே பேசிக்கொண்டிருக்கிறார். சும்மா ஒரு போட்டோ கிடைத்தாலே விட மாட்டாங்க. 

mp-parliament sasitharoor congress

இப்படி ஒரு கிளிப் சிக்கி இருக்கு. விட்டுருவாங்களா என்ன? சகட்டு மேனிக்கு மீம் போட்டு தள்ளி இருக்காங்க. சசி தரூர் ரியாக்சன் கூடிய விரைவில் மீம் மெட்டீரியலாக மாறும் என எதிர்பார்க்கலாம்.