பூட்டானில் ஒரு கலாச்சாரம் உண்டு. அதாவது ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்தான். ஒரு குடும்பத்தில் நான்கு ஆண்கள் இருந்தால் நான்கு ஆண்களுக்கும் ஒரு மனைவி தான். இரவில் ஒவ்வொரு ஆண்கள் ஒவ்வொருவராக படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள். இந்த நவீன காலத்திலுமா இப்படித் தொடர்கிறது? என யோசிக்க வைக்கிறது. இதனை விட கொடூரமான ஒரு சம்பவம் கிழக்கு பூட்டானில் நடக்கிறது. அங்கே இரவு ஆனதும் எந்த பெண்ணையும் வெளியில் அனுப்பமாட்டார்கள்.
நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி படையெடுக்கும் ஆண்கள், கண்ணில் பட்ட பெண்களை இழுத்துச் சென்று தங்களுடைய உடல் பசிக்கு இரையாக்கி கொள்வார்கள். எந்த பெண்களும் கிடைக்கவில்லை என்றால், நம்ம ஊரு கொள்ளையர்களை போல , நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை நாசம் செய்வார்கள். அவர்களுடைய முக்கிய குறி எதிர்த்து கேள்வி கேட்ட திறன் இல்லாத பெண்களாக பார்த்து, அவர்களை கட்டாயப்படுத்தி உறவு கொள்வதாகும்.
சில கிராமங்களில் வயல்வெளியில் தனியாக உறங்கும் பெண்களை குறி வைத்து இது போன்ற சம்பவங்கள் அதிகம் அரங்கேற்றப்படுகின்றன. பூட்டானில் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை சரியாக வகுக்கப்படவில்லை என்பதால், நாளுக்கு நாள் பெண்கள் இரையாவது அதிகரிக்கின்றதே தவிர, இன்னும் குறைந்தபாடில்லை. இப்படி அநியாயம் நடக்கும் போது ஒரு ஆண் கையும் களவுமாக சிக்கிக்கொண்டால், பழமையான வழக்கப்படி, அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கிராமமக்கள் கட்டாயப்படுத்துவார்கள்.
சிக்கிக்கொள்ளும் அளவுக்கு நகரத்து ஆண்கள் முன்னேற்பாடு இன்றி நுழைவதில்லை. ஒவ்வொரு பெண் வேட்டையிலும், ஒவ்வொரு மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் தமக்கு விருப்பமான ஒரு இளம் பெண்ணைத் தேடும் கலாச்சாரமாக இருந்து, இன்றைக்கு அதுவே சமூக சீர்கேடாக மாறிவிட்டது. வெகு விரைவில் இந்தக் கலாச்சாரம் முற்றாக அழிந்து போக வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.