காலம் மாற மாற தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு வருகின்றன. நாம் கனவிலும், கற்பனையிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் தற்பொழுது தொழில்நுட்பங்கள் மூலம் நடந்து வருகின்றன.
அந்த கால கட்டங்களில் மனிதனுக்கு உடல் உழைப்பு அதிகமாகவே இருந்தது உதாரணமாக பெண்கள் மாவு அரைப்பதற்கு கிரைண்டர் இல்லாமல் கைகளின் மூலம் அரைத்து வந்தனர். ஆனால் தற்போது கிரைண்டர் இல்லாத வீடுகளே இல்லை. இது போலதான் ஒவ்வொரு வேலையும் மனிதனுக்கு தற்போது இயந்திரங்களின் உதவியால் குறைந்து வருகிறது.
மனிதன் செய்யும் வேலைகள் எல்லாம் இயந்திரங்கள் செய்ய ஆரம்பித்து விட்டன. அதிலும் மனித வடிவில் ரோபோக்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனித உடல் அமைப்பை போலவே அமைந்திருக்கும். இந்த ரோபோ மனிதர்கள் செய்வது போலவே வேலை செய்வது போன்று தயாரிக்கப்படுகிறது.
சமீப காலத்தில் ஹோட்டல்களில் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்களை பயன்படுத்தி பிரபலமாகி வருகின்றன. மைசூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சேலை அணிந்தவாறு ரோபோ உணவு பரிமாறி வருகிறது. அதைப்போலவே டெல்லியில் அமைந்துள்ள 'தீ எல்லோ ஹவுஸ்' என்ற பெயருடன் ரோபோ ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்படுகிறது. இந்த உணவகத்தின் கிளை உணவகங்களிலும் ரோபோக்கள் தான் உணவினை பரிமாறி வருகின்றன.
இந்த ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படுவதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் ஜூஷீ கூறியுள்ளார். ரோபோவிற்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தாலே போதுமாம். அந்த நாள் முழுவதும் அது வேலை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஆர்டரை செல்போன்மூலம் பதிவு செய்தால் அந்த ரோபோக்கள் அந்த மேஜைக்கு உணவை பரிமாறிவிடும். சொல்லப்போனால் இந்த ரோபோக்களின் வரவிற்குப் பின்னர் இந்த உணவகத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருவதாக கூறப்படுகிறது.