வளர்ந்து வரும் இந்த கால கட்டங்களில் அனைவரும் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவதை விரும்பி வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஹோட்டலுக்கு செல்வது, வார இறுதியில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் செல்வது என்று ஹோட்டல் செல்லும் பழக்கம் வழக்கமாகி உள்ளது.
ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது என்பதை தாண்டி சாப்பிடும் ஹோட்டல் சுத்தமாக உள்ளதா, உணவகங்களில் உணவு தரமாக உள்ளதா, சாப்பிடுவதற்கு அமைந்திருக்கும் இடம் நல்ல சுத்தமான முறையில் இருக்கிறதா என்று பல்வேறு நிபந்தனைகள் மக்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் தற்போது ஹோட்டல்களும் நல்ல சுத்தமானதாகவும், மக்களை ஈர்க்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டும் அமைந்துள்ளது.
அந்த வரிசையில் சிங்கப்பூரில் ரஃபேல்ஸ் சிட்டியில் ரெஸ்டாரண்ட் ஒன்று உள்ளது. இந்த ரெஸ்டாரண்ட் மிகவும் தூய்மையானதாகவும், கண்களைக் கவரும் வகையில் அழகாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த அழகிற்காக ரெஸ்டாரண்டில் கல் சுவர்களுக்கு பதிலாக சுற்றிலும் கண்ணாடியாலான தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இதில் என்ன ஒரு பிரச்சினை என்றால் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அந்த கண்ணாடி தடுப்புகள் தெரியாமல் போவதுதான். சமீபத்தில் இந்த ரெஸ்டாரண்ட்டிற்க்கு 53 வயது நிறைந்த ஸூ என்ற பெண் சாப்பிட வந்துள்ளார். சாப்பிட வந்தவர் அங்கிருந்த கழிவறைக்குச் செல்வதற்காக சென்றபோது தடுப்பு கண்ணாடி இருப்பது தெரியாமல் அதில் மோதியுள்ளார். இதனால் அவருக்கு சிறிதளவு உதட்டில் காயம் ஏற்பட்டது.
இதற்காக ரெஸ்டாரன்ட் நிர்வாகம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதோடு அவர் ஆர்டர் செய்த உணவின் பில்லில் 10% தள்ளுபடி செய்து மேலும் சில உணவுகளையும் அவருக்கு இலவசமாக கொடுத்து வழங்கினர். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் கண்ணாடி தடுப்புகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவதற்காக கண்ணாடி சுவர்களின் முன் பாரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.