notification 20
Spellbound
முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான முதல் படங்கள் இதுதான்! யாருமே இவங்கள நோட் பண்ணி இருக்க மாட்டோம்!

ஒரு நடிகர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் மட்டும் தான் அவர் யார் என்று நம்ம எல்லோருக்கும் முழுசா தெரியும். சும்மா ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் ஓரமாக நின்று விட்டு சென்றால் முன்னணி நடிகர்களை நமக்கு அடையாளம் தெரியாது. அந்த மாதிரி சில கதாப்பாத்திரங்களில் நடித்த சில முன்னணி நடிகர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

பரோட்டா சூரியை வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு பிறகு தான் நம்ம எல்லாருக்கும் அடையாளம் தெரியும். இந்த படத்திற்கு முன்னரே சூரி திருமதி செல்வம் என்னும் நெடுத்தொடரில் நடித்துள்ளார்.

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா சென்னை 28 படத்துல தான் முதலில் நடித்தார் என்று நம்ம எல்லாரும் நினைத்திருப்போம். ஆனால் ஆளவந்தான் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மிர்ச்சி சிவா ஒரு ஓரத்தில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்.

வாழ்க்கை சக்கரம் என்னும் சத்யராஜ் படத்தில் சுந்தர்.சி. போலீசாக நடித்திருப்பார்.

புதுப்பேட்டை படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

சென்னை 28 படத்தில் ஒரு சிறு காட்சியில் பா.ரஞ்சித் நடித்திருப்பார்.

மின்னலே படத்தில் மாதவன் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் கல்லூரியில் வகுப்பறையில் விதார்த் அமர்ந்திருப்பார்.

குஷி படத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக ஷ்யாம் நடித்திருப்பார்.

Share This Story

Written by

Karthick View All Posts