notification 20
Daily News
தெண்டமான பரிசு கூப்பன்கள்! குப்பை போல தேங்கும் ஸ்க்ராட்ச் கார்டுகள்! கூகிள் பேவால் பத்து பைசா பிரயோஜனமில்லை என கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

இணையத்தில் இன்று கூகிள் பேவை புறக்கணக்கிக்க வேண்டும் என்ற ஹாஸ்டேக்குகள் அதிக அளவில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் கூகிள் பேவில் முன்பு போல ரிவார்ட்ஸ் கொடுப்பதில்லை என்பது தான். ட்விட்டரில் ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது டெஸ் என்ற பெயரில் இருந்தபோது கூகிள் நிறுவனம் எந்த அளவுக்கு இலவச ஆபர்கள் மற்றும் கேஷ் பேக்குகளை வழங்கியுள்ளது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.

நண்பருக்கு அல்லது புதிதாக யாருக்காவது பணம் அனுப்பினால் நமக்கு பரிசாக 20, 30 என பணம் கிடைக்கும். கரண்ட் பில் போன்ற கட்டணங்களை செலுத்துவதற்கும் சிறப்பு பரிசு கொடுக்கப்படும். வாரம் ஒரு முறை ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 1 லட்சம் பம்பர் பரிசு கிடைக்கும். ஆனால் இப்போது அப்படி எந்தப்பரிசுமே கிடைப்பதில்லை என்பதால் கூகுள் பே வாடிக்கையாளர்கள் பலரும் கூகிள் பேவுக்கு பதில் வேறு ஆப்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

டெஸ் என்ற பெயரை கூகிள் பே என்று மாற்றியபிறகு அவர்கள் கொடுக்கும் ரிவார்ட்ஸ் எல்லாம் ப்ரயோஜனம் இல்லாத வவுச்சர்களாகத்தான் இருக்கிறது. வாடிக்கையாளருக்கு பயன்படாத வவுச்சர்களை பரிசாக அள்ளித்தரும் கூகிள் பேவை நாம் அனைவரும் மொத்தமாக சேர்ந்து அன்இன்ஸ்டால் செய்துவிடலாம் என்று ஒருவர் கூறுகிறார். இப்படி பலரும் கூகுளை கழுவி ஊற்றி வருவதால் அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது.

Share This Story

Written by

J Gowthama Raja Kumaran View All Posts