நம் இந்தியாவில் வெளியான சில படங்களை எல்லோரும் பார்க்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். அதேபோல நிறைய வெளிநாட்டு படங்களை இந்த நாட்டு மக்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள் பார்க்க தடை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த படத்தில் இடம்பெறும் அந்தரங்க காட்சிகளினாலும், வன்முறை காட்சிகளினாலும் அந்த படத்தை பார்க்க தடை விதித்ததாய் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இளையராஜா பாட்டு எதுக்காக எல்லோரும் விரும்பி கேட்போம், மனசு அமைதி ஆவதற்கும், ரிலாக்ஸ்ஸா இருக்கணும்ங்கிறதுக்காக இளையராஜா பாட்டு நம்ம எல்லோரும் கேட்போம்.பாட்டு எதுக்கு கேப்பாங்க, நம்மளோட மனசு ரிலாக்ஸ் ஆகணும்ங்கிற காரணத்துக்காகத்தான் எல்லாரும் பாட்டு கேப்போம். ஆனால் இந்த ஒரு பாட்டை யாரும் கேட்கக்கூடாது என்று நிறைய நாடுகளில் தடை விதித்துள்ளனர்.
குலூமி சண்டே என்னும் ஹங்கேரியன் பாடல் தான் அந்த பாடல். இந்த பாடலை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நமக்கு நெருக்கமான ஒருவரின் இறப்பை பற்றியும், விரைவில் நானும் அந்த நெருக்கமான நபருடன் வந்து சேர்ந்து கொள்கிறேன் என்பதை போலவும் இந்த பாடலின் வரிகள் இடப்பெற்றிருக்கும்.
நிறைய நாடுகளில் இந்த பாடலை ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றும் என்றும் சொல்லப்படுகிறது. சாதாரண மனநிலையில் உள்ளவர்களை இந்த பாடல் எதுவும் செய்யாது என்றும் சொல்லப்படுகிறது. இப்பவும் இந்த பாடலை ஒளிபரப்ப நிறைய நாட்டில் தடை அமலில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.