திருமணம் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அற்புதமான நிகழ்வு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒரு அங்கமாகும். பெண்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து புதிதாக ஒரு இடத்திற்கு மாறிச் செல்லும் நிலை திருமணத்தில் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் கிராமம் ஒன்றில் பெண்களுக்கு மூன்று முறை திருமணம் செய்து வைக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. பெண்கள் பிறந்ததில் இருந்து அவர்களுக்கு சடங்கு முறைப்படி மூன்று முறை திருமணம் செய்து வைக்கின்றனர்.
பெண்கள் பிறந்ததிலிருந்து அவர்களுக்கு ஐந்து வயது முடிவதற்குள் ஒருமுறை சடங்குகள் செய்து மணமகன் இல்லாமல் திருமணம் போன்ற நிகழ்வு ஒன்று செய்கின்றனர். அதற்கு பின்னர் வயதுக்கு வந்த பிறகு அதைப்போலவே மணமகன் இன்றி ஒரு முறை திருமணம் செய்து வைக்கின்றனர்.
இந்த இரண்டு திருமணமுமே அந்த ஊர் பெரியவர்களால் தேதி குறிக்கப்பட்டு அந்த கிராமத்தில் இருக்கும் அனைவரின் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
இந்த இரண்டு திருமணங்களுக்குப் பிறகுதான் மூன்றாவதாக மணமகனுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த மூன்றாவது திருமணத்தில் அந்த பெண்தான் தன்னை திருமணம் செய்யும் மணமகனை தேர்வு செய்வாள். இதுபோன்ற திருமணங்கள் அனைத்தும் அந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தி வைப்பர்.