notification 20
Misc
நாய் குரைக்கும் போது அதன் கண்களை பார்த்தால் என்ன ஆகும்? இது தெரியாமல் தெருத்தெருவா ஓடியிருக்கேன்! யாருக்கும் தெரியாத அந்த "பைரவர்" ரகசியம்!

எனக்கு நாய்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. நாய் குரைக்கிறது என்று, நேராக வரவேண்டிய வீட்டிற்கு, இரண்டு மூன்று தெரு சுற்றி எல்லாம் வந்திருக்கேன். அது என்னமோ தெரியலைங்க, நாய் குரைக்கும் சத்தம் கேட்ட உடனே கை முடி எல்லாம் சிலிர்த்துக்கொள்கிறது. அடி வயிற்றில் இருந்து, ஏதோ குளிர்ச்சியா மேலே எழும்புவது போன்ற உணர்வு வருகிறது. சின்ன பையனா இருக்கும் போது, நாய் கடித்தால், தொப்புளை சுற்றி 16 ஊசி போட வேண்டுமென்று பயமுறுத்திவிட்டதால், இப்போ 30 வயதான பிறகும், அந்த பயம் போகவில்லை. 

தயவு செஞ்சு குழந்தைகளை என்னை மாதிரி வளர்க்க வேண்டாம். எதைக்காட்டியும் பயமுறுத்த வேண்டாம். எதுவா இருந்தாலும் தைரியமா எதிர்கொள்ள பழக்கிவிடணும். அது தான் எதிர்காலத்துக்கு நல்லது. என்னுடைய அம்மாச்சி ஒரு,முறை சொன்னாங்க. நாய் குரைக்கும் போது, அதனுடைய கண்களை பார்க்காமல், நீ பாட்டுக்கு நடந்து போ, பயம் எல்லாம் போயிரும்னாங்க. பொதுவா நாய்கள் நம் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ளும் சக்தி கொண்டது. 

நம் கண்கள் முலம் இவன் பயத்தை அறிந்து கொள்ளும். அதனால் கண்ணை பார்க்காமல் அமைதியாக கடந்து சென்றால் பெரும்பாலான நாய்கள் ஒன்றும் செய்யாது. அதனை மீறி அருகில் வருவது போல தெரிந்தால், அதனுடன் பேச்சு கொடுப்பது போல, சத்தமிட ஆரம்பித்தால் ஓடி விடும். அப்போது கண்களை பார்க்கக்கூடாது. என்னதான் பயம் இல்லாத மாதிரி நாம் காட்டிக்கொண்டாலும், உள்ளே உதறல் எடுப்பதை நாய்கள் புரிந்துகொள்ளும். முடிந்த வரையில், அதோட போக்கில் விட்டுவிட வேண்டும். 

நாய்கள் எப்போதும் ஒரு எல்லை அமைத்துக்கொண்டு வாழும். அந்த எல்லைக்குள் புதிதாக யார் நுழைந்தாலும் எதிர்க்கும். அது மனிதனாக இருந்தாலும் சரி, மற்ற நாயாக இருந்தாலும் சரி. நீங்க வேண்டுமென்றால் பாருங்க. தெரியாத ஒரு நாய் உங்க ஏரியாவுக்குள் வந்தால், அங்குள்ள எல்லா நாய்களும் ஒன்று சேர்ந்து துரத்தும். அதனுடைய எல்லைக்குள் நாம் எதுவும் செய்ய மாட்டோம் என உணர்ந்துகொண்டால், நம்மைக் கண்டு குரைக்காது. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts