வீடுகளில் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் மக்கள் ஏராளம். தங்களுடைய செல்ல நாய்க்கு ஆடை, அலங்காரம், விதவிதமான உணவு போன்றவற்றை வாங்கித்தரும் ஓனர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் நாயை தங்களுடைய பிள்ளையை போல் பாவித்து அதற்கு கல்யாணம் செய்து வைத்துள்ள ஓனர் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அந்த அதிசய ஓனர் ஹரியானாவில் உள்ள குருகிராம் பகுதியில் வசித்து வருகிறார்.
சவிதா என்ற பெண்மணி தன்னுடைய வீட்டில் ஸ்வீட்டி என்ற பெயரைக்கொண்ட நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை என்பதால் தன்னுடைய செல்லப்பிராணியை குழந்தையாக நினைத்து அதற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் நாய்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடவே அதையும் தற்போது நடத்திக்காட்டி அசத்தியுள்ளார் சவிதா.
சவிதாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மணிதா என்ற பெண்ணும் நாயை வளர்த்தி வருகிறார். அவருடைய ஆண் நாயின் பெயர் ஷெரு. ஸ்வீட்டியை ஷெருவுக்கு கல்யாணம் செய்துவைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றானவுடன் பாரம்பரிய முறைப்படி பத்திரிக்கை அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.
#WATCH via ANI Multimedia | ‘Sheru weds Sweety; Neighbourhood comes alive amid ‘furry’ wedding festivities in Gurugram, Haryana.https://t.co/60mW9P4V5d
— ANI (@ANI) November 14, 2022
நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து இரண்டு நாய்களுக்கும் திருமணத்தை செய்து வைத்தனர் சவிதா மற்றும் மணிதா. மணமக்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு கெட்டி மேளம் கொட்ட மிக சிறப்பான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.