Hugs & Kisses

30 வயதை அடையும் முன் ஆண்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்! இதனை 25 வயதிற்குள் செய்திருந்தால், நீங்க தான் ராஜா! கால் மேல் கால் போட்டு என்ஜாய் பண்ணலாம்!

May 03 2022 12:08:00 PM

இப்போதைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் என்ன நடக்குதுன்னே தெரியல. கன்னடநடிகர் புனித்ராஜ்குமாருக்கு மாரடைப்பு வந்த நேரத்தில், எங்க ஊரில் உள்ள பசங்க எல்லாம் சேர்ந்து முழு உடல் பரிசோதனை செய்து கொண்டோம். அதில் 30 வயதுக்கு கீழ் உள்ள 3 பேருக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருக்குன்னு சொன்னாங்க. கவனிக்காமல் இருந்திருந்தால், அவர்களுக்கு எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகியிருக்கும். இப்போ கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடறாங்க. வாரம் இரண்டு முறை பாஸ்ட்புட் போன பசங்க, இப்போ மாதம் ஒருமுறை என மாற்றிக்கொண்டனர். சூழ்நிலை இப்படி இருக்கும் போது, 30 வயதை நெருங்கும் முன்னரே நாம் ஒரு சில காரியங்களை செய்துவிட வேண்டும். 

1. மருத்துவ காப்பீடு

salary job mens

நமக்கும், நம்முடைய குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு ரொம்ப அவசியம். மிடில் கிளாஸ் மக்களின் பாதி சேமிப்பு கரைந்து போவதற்கு காரணம், எதிர்பாராமல் வரும் மருத்துவ செலவுகள். அவற்றில் இருந்து தப்பிக்க மருத்துவ காப்பீடு அவசியம். 

2. உடற்பயிற்சி

salary job mens

கொலஸ்ட்ரால், சுகர் வந்தால் மட்டும் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. முப்பது வயதுக்குள் தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால், அது எதிர்காலத்துக்கான ஆரோக்கியமான பழக்கமாக மாறிவிடும். 

3. திருமணம்

salary job mens

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 30 வயதுக்குள் திருமணம் செய்துகொண்டால், அடுத்து 10 வருடம் குடும்பத்திற்காக உழைக்க நேரம் சரியாக இருக்கும். காலம் தவறி திருமணம் செய்தால், குழந்தைகளை கரை சேர்ப்பதற்குள் நமக்கு வயதாகிவிடும். 

4. முதலீடு 

salary job mens

சம்பளத்தை மட்டுமே நம்பி இருக்காமல், மியூச்சுவல் பண்ட், ஷேர் போன்றவற்றை கற்றுக்கொண்டு சிறுக சிறுக சேமிப்புகளை மேற்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டால், 40 வயதை கடந்த பிறகு பெரிய தொகையாக கிடைக்கும். 

5. உணச்சிகளை அடக்க வேண்டும்

salary job mens

30 வயது வரை எல்லோருமே நல்லவங்களாக தெரிவார்கள். அதற்கு பிறகு எதிரிகளை சம்பாதிக்கக்கூடிய வயதை எட்டி விடுவீர்கள். அது ஆபீஸ், சொந்த பந்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 30 வயதுக்குள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டால், அவர்களை எளிதாக சமாளித்துவிடலாம்.