தமிழ் சினிமாவில் இளம் தலை முறைக்கான வெற்றி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அட்லி. எந்திரன், நண்பன் என இரண்டு படங்களிலும் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இயக்குனர் அட்லி முதலில் படம் இயக்குவதற்கு முன்னரே ஒரு நல்ல இயக்குனராக வெற்றியாளராக வருவார் என்று ஷங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரை கவர்ந்த இயக்குனர் அட்லி.
இயக்குனர் அட்லி இயக்கிய முதல் படமான ராஜா ராணி படம் 2013-ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. காதலில் தோல்வியடைந்தவர்கள் அதற்குப்பிறகு திருமணம் என்னும் புதிய வாழ்க்கையை தொடங்கி மகிழ்வுடன் வாழ்வதை காட்டும் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ராஜா ராணி படத்தினைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் மெர்சல், தெறி, பிகில் என பல்வேறு படங்களை வெளியிட்டார். அட்லியின் இயக்கத்தில் வெளியான இந்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானை வைத்து படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
அட்லி இயக்கும் ஷாருக்கான் படத்திற்கு லயன் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் அட்லி பல்வேறு சண்டைக்காட்சிகளை உருவாக்க உள்ளார். எனவே இந்தப் படத்திற்கு அதிக செலவாகுவதாகவும் 200 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லியிடம் படம் தயாரிப்பது பற்றி கேட்டுள்ளார். அப்பொழுது அல்லு அர்ஜுனிடம் அட்லி 35 கோடி ரூபாய் தனக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அந்த சம்பளத்தை கேட்ட அல்லு அர்ஜுன் இந்த சம்பளம் தர முடியாது எனக் கூறி விட்டார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.