notification 20
Daily News
ஒரு நொடியில் வாழ்க்கை எப்படி வேண்டுமானலும் மாறலாம் : கல்யாணத்தில் ஆடியவருக்கு கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் - நேரடி வீடியோ!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் திருமண விழாவில் நடனமாடிய ஒரு நபர் திடீரெனதவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் மாநிலத்தின் குடா ராம்சிங் கிராமத்தைச் சேர்ந்த சலீம் பாய் ரனாவாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வாழ்க்கை அடுத்த நொடியில் எப்படி மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இருக்கின்ற வரையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

சலீம் பாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த போது இந்த நிகழ்வு நிகழ்ந்தது. சரிந்து கீழே விழுவதை கண்டதும், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுபோன்று மகிழ்ச்சியாக நடனம் ஆடும்போது இறப்பு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை கிடையாது. ஏறக்குறைய 40 வயது தொட்ட நபர்கள் கொரோனாவுக்கு பின்பு உடற்பயிற்சி செய்யும் போதும், உடலை வருத்தி வேலை செய்யும் போது மாரடைப்பு வந்து மரணம் அடைவதை காண முடிகிறது. இந்த நேரத்தில் மருத்துவ பரிசோதனை என்பது அவசியமாகிறது. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts