Daily News

அடுத்த வருடம் கோப்பையை கைப்பற்ற இப்பவே வியூகம் வகுக்கும் தோனி! ரெய்னாவை தொடர்ந்து வரிசையாக பலருக்கு ஆப்படிக்க போறாங்களாம்!

May 16 2022 02:26:00 PM

சென்னை அணி இந்த வருடம் ஐபிஎல் சீசனை எப்படியாவது மறந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் ஏலத்துக்கு முன் செய்த தவறு. ஏலத்துக்கு பின் செய்த தவறு என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சரி நடந்து முடிந்ததை பற்றி பேசுவதால் ஏதாவது மாறப்போகிறதா சொல்லுங்க? அடுத்த வருடத்துக்காவது உருப்படியான டீம் உருவாக்க வேண்டும் என இப்போதே யோசிக்க தொடங்கியுள்ளது சென்னை அணி நிர்வாகம்.

ambati-rayudu ms-dhoni robin-uthappa

ஜடேஜாவை கேப்டனாக்கிவிட்டு தோனியை இந்த வருடத்துடன் கழட்டி விட்டுடலாம் என்று பார்த்தால் அவர் இன்னும் கேப்டனிசி குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருப்பது போல தெரிகிறது. சரி அடுத்து யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்று யோசித்தால் கண் முன் வந்து நிற்பவர் ருத்துராஜ். சார் ஆல்ரெடி பேட்டிங்கில் தொடர் சொதப்பலில் இருக்கிறார். இவரிடம் கேப்டன் பதவியை கொடுத்தால் இவருடைய பேட்டிங் பார்ம் மேலும் பாதிக்கப்படும். இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க அடுத்த வருடமும் தோனியே சென்னை அணியை வழிநடத்தி செல்வது தான் சரியாக இருக்கும் என அணி நிர்வாகம் கருதுகிறது.

ambati-rayudu ms-dhoni robin-uthappa

இருப்பினும் அணியில் இருக்கும் பல முக்கிய வீரர்களுக்கு அல்வா கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சத்தமே இல்லாமல் ரெய்னாவுக்கு வேட்டு வைத்ததை போல தற்போது உத்தப்பா, ராயுடு ஆகியோருக்கு வேட்டு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கான்வே ஓபனிங் பேட்ஸ்மானாக வருவதால் உத்தப்பா மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டு பார்மை இழந்துவிட்டார்.

ambati-rayudu ms-dhoni robin-uthappa

ஒரு காலத்தில் துவக்க வீரராக கலக்கிக்கொண்டு இருந்த ராயுடுவும் தற்போது பெரிய பார்மில் இல்லையென்பதால் மிச்சம் மீதி இருக்கும் சீனியர் வீரர்களையும் கழட்டி விட்டுட்டு முற்றிலும் இளம் வீரர்கள் நிறைந்த  ஒரு அணியை உருவாக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். எதிர்காலத்துக்கு தேவையான ஒரு புது அணியை உருவாக்கி கொடுத்துவிட்டு அடுத்த வருடத்துடன் தோனியும் அணியில் இருந்து விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது. சென்னை அணி அடுத்த வருடம் யார் யாரை கழட்டிவிடப்போகிறது என்பதை மற்ற அணி நிர்வாகங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றன. அடுத்த வருடம் என்னென்ன சம்பவங்கள் அரங்கேறவிருக்கிறதோ தெரியலயே.