ஒரு சில மனிதர்கள் செல்லப்பிராணிகளை வளர்த்து வருவார்கள். அந்த செல்லப்பிராணிகளை ஒரு பிராணியாய் நினைக்காமல் தன்னோடு வாழும் தன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே நினைப்பார்கள். அந்த செல்லப் பிராணிக்கு பிறந்த நாள் கொண்டாடுவது, வளைகாப்பு நடத்தி வைப்பது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் சமீபத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த அளவிற்கு செல்லப்பிராணிகள் தன்னை வளர்ப்பவரின் மீது அலாதியான அன்பு செலுத்தி வருகிறது. அன்பு மட்டுமின்றி சில சமயங்களில் அவர்களை காப்பாற்றியும் வருகிறது.
செல்லப் பிராணிகளும் அவைகளை வளர்ப்பவர்களுடன் உணர்வுபூர்வமாக கலந்து விடுகின்றன. எவ்வளவுதான் மன சோர்வு மற்றும் கவலையுடன் வெளியிலிருந்து வீடு திரும்பினாலும் வீட்டிற்குள் வந்ததும் தனது செல்லப் பிராணிகளை கண்டு அவைகளுடன் கொஞ்சி விளையாடி அத்தனையும் மறந்து மகிழ்ச்சி அடைகின்றனர் சிலர்.
இந்நிலையில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான பூனையைப் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி உள்ளது. அந்த வீடியோவில் வீட்டில் குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டிருக்கும் வேளையில் அந்த வீட்டில் வளர்க்கும் பூனை குட்டி அந்த குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக அந்தக் குழந்தையிடம் விளையாட்டு காட்டுவது போல் செய்து அழுகையை நிறுத்தியுள்ளது.
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் அந்தக் குழந்தைக்கு அந்த பூனைதான் இன்னொரு தாய் எனவும் அது போன்ற ஒரு அக்கறையை கொண்டுதான் அந்த பூனை குழந்தையை பார்த்துக் கொள்கிறது எனவும் கூறி அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும் பொழுது வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்காதவர்களுக்கும் கூட வீட்டில் வளர்க்கலாம் என்ற ஆசை வந்துவிடும்.