notification 20
Spellbound
#achievers: எளிமையான ஆளுன்னு, குறைவா எடை போட்றாதீங்க! பாலிவுட் பக்கம் செல்லப்பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு மவுசு!

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை  திரை உலகமானது  திறமை இருக்கும் மனிதர்களை மொழிபாகுபாடு என்ற பிரிவினை இல்லாமல் எப்போதும் பயன்படுத்தி கொள்ளும் என்பதற்கு சில மனிதர்கள் உதாராணமாக உள்ளனர். எத்தனை பேர்?   ஹாலிவுட் வரை சென்ற  AR ரகுமான்,  பாலிவுட் வரை தடம்பதித்த AR முருகதாஸ் என சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி வேற்று மொழிகளில் சாதனை படைத்த தமிழ் சாதனையாளர்கள். 

இவர் யாரென்று தெரிகிறதா? சதுரங்க வேட்டை படத்தின் நாயகன் நட்ராஜ். பாலிவுட் பக்கம் இவரது செல்லப்பெயர் நட்டி.  பாலிவுட்டில் பிசியாக உள்ள முன்னணி ஒளிப்பதிவாளர். பரமக்குடிகாரர் தான். இவர்கள் இல்லாமல் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களுக்கு தமிழ் மொழியில் உள்ளதை காட்டிலும் மற்ற மொழிகளில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 

இன்று வெற்றி மகுடத்தை தனதாக்கிய மணிரத்னம் மற்றும் பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்ததே கன்னட திரையுலகம் தான்.பாலுமகேந்திராவை  முதன்முதலாக ஒளிப்பதிவாளராக பயன்படுத்தியது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகம்.

சென்னையில் பிறந்த வைஜயந்தி மாலா, பாலிவுட் வரை தடம் பதித்தார். திறமை மட்டுமே அவரை அந்த இடத்திற்கு எடுத்து சென்றது. தமிழில் 'வஞ்சி கோட்டை வாலிபன்' மூலம் அறிமுகமானார். தமிழில் 'வஞ்சி கோட்டை வாலிபன்' மூலம் அறிமுகமான இவர் தமிழ்,ஹிந்தி என  இரு மொழி ரசிகர்களையும் கவர்ந்தார். 

தஞ்சாவூரில் பிறந்த ஹேமமாலினி, இவரது காலத்தில்  ஹிந்தி படங்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர். இவரை மணக்க பல நடிகர்கள் போட்டி போட்டார்கள் என கூற கேள்விப்பட்டதுண்டு. 25 ஆண்டுகாலம் இந்தி சினிமாவில் புகழோடு இருந்தவர்.    

சென்னையில் பிறந்த ரேகா, இவரும் பாலிவுட்டில் தனது தடத்தை பதித்தவர். தனது நடிப்பு ஆசைக்கு குடும்பம் ஒப்புக்கொள்ளாவிடினும் பல தடைகளை தாண்டி சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து சாதித்துள்ளார். 

தேனியை பிறப்பிடமாக கொண்ட ராஜசேகர், இவர் தெலுங்கு திரைத்துறையில் வெகு பிரபலம். தமிழில் இவரது திரைப்பயணம் குறைவே.

உடுமலைப்பேட்டையில் பிறந்த ஷகிலா. மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றாலும் இவரது படங்கள் உலக மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப்பட்டதால் இவருக்கு ரசிகர்கள் கடல்கடந்தும் உள்ளனர். இதெல்லாம் தவிர்த்து ஸ்ரீதேவி, தனுஷ் என சொல்லிக்கொண்டே போகலாம். சும்மா இல்லை, பெரும்பாலானோர் ட்ரென்ட் செட்டராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கிவிட்டு தான் வந்துள்ளனர். நம்மாட்களின் திறமை திரைத்துரையை பொறுத்தமாட்டில் கடல்கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

Share This Story

Written by

Akila View All Posts