Daily News

மொக்க படம்ன்னு சொன்னீங்க! இப்போ நெட் பிளிக்ஸ்ல அந்த படம் தான் டாப்புல போய்கிட்டு இருக்கு!

May 23 2022 01:17:00 PM

தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியானது. மற்ற விஜய் படங்களை போல இல்லாமல் இந்த படத்திற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்தது. படத்தில் நடிகர் விஜய்யை தவிர வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று ரசிகர்கள் படத்தை பற்றி கழுவி ஊற்றினார்கள்.

beast movie netflix top views

என்னதான் படத்தை விமர்சனம் செய்தவர்கள் மோசமாக விமர்சித்திருந்தாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக படத்தை பார்க்க குவிந்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தின் தமிழ்நாடு ஷேர் எவ்வளவு என்கிற தகவல் வெளியானது. பீஸ்ட் படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருந்தது.

beast movie netflix top views

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீஸ்ட் படம் நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் வெளியானது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிறைய ரசிகர்கள் பீஸ்ட் படத்தை நெட் பிலிக்ஸ் தளத்தில் ரசித்து பார்த்து வருகிறார்கள். நெட் பிலிக்ஸ் இந்த வார டாப் 10 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் ஹிந்தி வெர்சன் 5 வது இடத்திலும், பீஸ்ட் தமிழ் வெர்சன் 7 வது இடத்திலும் உள்ளது.

beast movie netflix top views