Spellbound

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு இந்த முக்கிய பிரபலம் தான் காரணம்! நெல்சன் மேல எந்த தப்பும் இல்லையாம்!

Apr 20 2022 10:51:00 AM

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீஸ்ட் படம் வெளியானது. பொதுவாக ஒரு முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும் நேரத்தில் அந்த படத்திற்கு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை பரப்புவார்கள். ஆனால் இந்த பீஸ்ட் படத்திற்கு எல்லோரும் எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டார்கள். படத்தில் சொல்லிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை எனும் அளவுக்கு பீஸ்ட் படம் அமைந்துவிட்டது.

beast movie flop reason vijay

பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனதற்கு நெல்சன் தான் காரணம் என்று சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் நெல்சனை கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் கதை முதலில் காமெடி மற்றும் குடும்பப் படமாகத்தான் எடுப்பதாக நெல்சன் விஜய்யிடம் கதை சொல்லி இருக்கிறார்.

beast movie flop reason vijay

அந்த கதையும் விஜய்க்கு ரொம்ப பிடிச்சதாம். ஆனால் விஜய் தான் படத்தின் கதையில் தலையிட்டு ஆக்சன் மற்றும் காமெடி ஜானராக படத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். பின்னர் விஜய்யின் விருப்பத்திற்கு ஏற்ப படத்தை ஆக்சன் காமெடி ஜானராக நெல்சன் மாற்றினார் என்று சொல்கிறார்கள்.

beast movie flop reason vijay

படம்  வெளியான பிறகு படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்து நெல்சன் ரொம்ப நொந்து போய்விட்டாராம். பின்னர் நடிகர் விஜய் நெல்சனுக்கு போன் பண்ணி அதெல்லாம் அப்படி தான் பேசுவாங்க, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து மீண்டும் ஒரு படம் பண்ணுவோம் என்று நெல்சனுக்கு விஜய் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே நெல்சன் பீஸ்ட் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது பெரிய நடிகர்களின் படங்களை எடுப்பதில் நிறைய சிக்கல் இருக்கு. பெரிய நடிகர்கள் கதையில் தலையிடுவார்கள் என்று சொல்லி இருந்தார். அது இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.

beast movie flop reason vijay