Spellbound

வயசு 40 ஆகுது ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலா? அந்த பொண்ணுக்கு ராசி இல்ல, இளம் நாயகிகளுடன் போட்டி போட முடியாமல் திணறுது! பிரியாணி வாங்கி கொடுத்தே அந்த பொண்ணை கரெக்ட் செய்த சிம்பு! உதடு புண்ணாகி விடும் என அந்த ஹீரோவுக்கு நோ சொன்ன திரிஷா!

Mar 02 2022 03:32:00 PM

'40 வயதாகியும் கூட இன்னும் திரிஷா திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?' என்பது குறித்து சினிமா பிரபலம் ஒருவர் மனம் திறந்துள்ளார். திரிஷாவின் சினிமா பயணம் என்பது அவ்வளவு மென்மையானது அல்ல, சினிமாவில் ஆண்களுக்கே கரடுமுரடான பயணம் எனும்போது, பெண்களுக்கு மட்டும் எளிதாகவா இருந்திருக்கும்? அப்படித்தான் துணை நடிகையாக அறிமுகமான திரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்த சில இயக்குனர்கள், திரிஷாவை 'மவுனம் பேசியது,  மனசெல்லாம்' போன்ற படங்களில் ஹீரோயினாக அறிமுகம் செய்தனர்.  இரண்டு படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இதனால் அடுத்து இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் யோசித்தனர். 'அந்த பொண்ணு ராசி இல்லாத பொண்ணு' என கூறும் அளவிற்கு இவரை அசிங்கப்படுத்தினர். இருப்பினும் இயக்குனர் ஹரி, சாமி படத்தில் ஹீரோயினாக நடிக்க திரிஷாவை நாடினார். திரிஷா ஹீரோயினாக நடிக்கும் மூன்றாவது படம் சாமி. 

trisha bailyvan-ranganathan STR
பத்திரிகையாளர் சந்திப்பில் சாமி படம் ஓடவில்லை என்றால் இனி நடிப்பதையே நிறுத்தி கொள்கிறேன் என துணிச்சலாக பேசியவர் திரிஷா. ஆனால் அந்த படமோ சக்கை போடு போட்டது. அடுத்தடுத்து திரிஷா  எடுத்து வைத்தது எல்லாமே வெற்றிப்படிதான். ஆரம்பகாலத்தில் இவர் சிம்புவுடன் நடித்த படங்களில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி தாறுமாறாக இருந்தது.  பின்னர் அது கிசுகிசுக்கவும் செய்தது. பின்னர் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் அந்த கெமிஸ்ட்ரி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. எப்போதுமே திரிஷாவின் மனம் கவர்ந்தவராக சிம்பு இருந்துள்ளார். அக்ரஹார பெண்ணாக இருந்த திரிஷாவுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து, பிரியாணி உண்ண பழக்கியுள்ளார் இந்த ஹீரோ! 

trisha bailyvan-ranganathan STR

பின்னர் தெலுங்கு சினிமா இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கவே, அங்கு சில காலம் வெற்றி கொடியை பறக்கவிட்டார். அங்கேயும் தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் வலையில் விழுந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூட செய்திகள் வெளியானது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒன்றாக கலந்து கொள்வது, ஒரே வீட்டில் தங்குவது என காதலுக்கு உண்டான அறிகுறியை தான் இருவரும் வெளிப்படுத்தினர். ஆனால் ராணாவோ இருவரும் நண்பர்கள் தான் என அறிவிக்கவே திரிஷாவின் காதல் ஏமாற்றத்தில் மூழ்கியது. திரிஷாவும் சோசியல் மீடியாவில் சூசகமாக, நண்பர்களாக வருகிறார்கள், காதலிப்பது போல நடிக்கிறார்கள், எல்லாம் முடிந்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள் என வெளிப்படையாக பதிவிட்டிருந்தார். பின்னர் பதிவை நீக்கியும் விட்டார். 

trisha bailyvan-ranganathan STR
காதல் தோல்வி, அப்பா இ றந்துவிட்டது என அடுத்தடுத்து அடிகள். பட வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் திடீரென 96 படத்தில் அப்போதைய இளம் நடிகரான விஜய் சேதுபதி உடன் நடிக்க ஒப்பு கொண்டார். 96 படம் திரிஷாவின் கம்பேக் போல சூப்பர் ஹிட் ஆனது. இதுவரை திரிஷாவின் ரசிகனாக இல்லாதவர்கள் கூட திரிஷாவின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்திருப்பார்கள். முகத்தில் அப்படி ஒரு ஜொலிப்பு, எவரையும் வசீகரிக்கும் நடிப்பு என மீண்டும் வந்தார். அடுத்தடுத்து வாய்ப்பும் கிடைத்தது. மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் போட்டிபோட்டு நடித்தார். என்ன ஆனதோ அடுத்து மீண்டும் கமலுடன் நடிக்க நோ சொல்லிவிட்டார்.

trisha bailyvan-ranganathan STR

இதுமட்டுமா? ஹைதராபாத் ஹோட்டலில் தங்கியிருந்த போது, தனக்கே தெரியாமல் குளியலறையில் கேமரா வைத்து, தன்னை ஆடை இல்லாமல் முழுவதுமாக குளிப்பது போல உள்ள புகைப்படங்களை எடுத்து திரிஷாவை அசிங்கப்படுத்தியதையும் பொறுத்து கொண்டார். அந்த படம் அப்படியே பத்திரிகையிலும் வெளியானது. இருப்பினும் மனம் உடையாத திரிஷா, தனக்கு தெரியாமல் தன் குளியலறையில் கேமரா வைத்த ஹோட்டல், தன்னை கேட்காது தன் படத்தை வெளியிட்ட பத்திரிக்கை என இரண்டும் மீதும் வழக்கு தொடர்ந்தார். அவர்கள் கொடுத்த நஷ்ட ஈட்டையும் வாங்கமறுத்தார். 

trisha bailyvan-ranganathan STR
இளம் நாயகிகளுடன் போட்டி போட முடியாமல் ஒதுங்கிய திரிஷா என பேசிய வாய்களுக்கு தன்னுடைய நடிப்பு மூலம் பெரிய பூட்டு போட்டார். இவரை தேடிவரும் கதைகளுக்கு பெரிய கட்டுப்பாடு வைத்துள்ளார். காசு சம்பாதித்து விட்டேன் இனி சரியான கதாபத்திரம் வேண்டும் என்று நயன்தாரா, சமந்தா ஸ்டைலில் முயற்சித்து வருகிறார். நடிகைகள், நடிகர்களை போல ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை நோக்கி நகர்வது பாராட்டவேண்டியது. அதிலும் குறிப்பாக தனி பெண்ணாக,  ராசி இல்லாத பெண் என கூறியதை மனதில் ஏற்றுக்கொள்ளாமல் நடிப்பது சாதாரண விஷயம் இல்லை.