notification 20
Hugs & Kisses
"மர்ம உறுப்பை" கையில் எடுத்துக்கொண்டு வீடு தேடி வரும் பணியாளர்கள்! புதுசா கல்யாணமான தம்பதிகள் இதெல்லாம் தெரிஞ்சிக்க வேண்டாமா? ஒரே சங்கடமா போச்சு குமாரு!

இந்தியாவை பொறுத்தவரையில், பா லிய ல் கல்வி என்பது வெறும் கேள்விக்குறி தான் போலிருக்கு. சிறு வயதில் இருந்தே, பெண் பற்றி ஆணுக்கும், ஆண் பற்றி பெண்ணுக்கும் தெரியாமலேயே இருப்பதால், எதிர் பாலினம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மிதமிஞ்சி மனதில் பதிந்துவிடுகிறது. இந்த விஷயத்தில் ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கணும். எப்போதும் கட்டிப்போட்ட நாய் தான், அவுத்துவிட்ட உடனே கடிக்க பாயும். சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்களுக்கு மனிதர்கள் பழக்கப்பட்டவர்கள் என்பதால், அவ்வளவு சீக்கிரத்தில் கடிக்காது. 

அந்த மாதிரி தான் மனித மூளையும். இதைச் செய்யாதே, அதைச் செய்யாதேன்னு சொன்னா, அதில் என்ன தான் இருக்குன்னு செய்து பார்க்க ஏங்கும். எதையும் மறைத்து, சஸ்பென்ஸ் மாதிரி வைப்பது, மேற்கொண்டு தவறுகள் நடக்கவே வழி வகுக்கும். அதற்கு பதிலாக புத்தக கல்வி போல, ஆண், பெண் உணர்வுகள் பற்றியும், உடல் பற்றியும் அறிவாக போதித்தால், கொஞ்சமாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உண்டாகும். அட இவ்வளவு தானா? இதற்காகவா தப்பு செய்ய துணிந்தோம் என்கிற அளவுக்கு அடுத்த தலைமுறை மாறிவிடுவார்கள். 

இப்போ எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பதற்கு சின்ன உதாரணம் சொல்றேன். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராமத்தில் கர்ப்பம், கருத்தடை, பிறப்பு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு சுத்தமா இல்லையாம். வெறுமனே வாயில் சொன்னால் புரியாதுன்னு, சுகாதாரத்துறை  அதிகாரிகள், ரப்பர் வடிவிலான மர்ம உறுப்பையும், கருத்தடை சாதனங்களையும், சிறிது ஆணுறைகளையும் எடுத்துக்கொண்டு வீடு வீடா கிளம்பி இருக்காங்க. எப்படி செயல்பட வேண்டும் என விளக்கம் சொல்ல ஆரம்பித்த உடனே தம்பதிகள் தெரிச்சு ஓடுறாங்களாம். 

பல இளம் தம்பதிகளுக்கு இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் உடலுறவு பற்றிய அறிவு இல்லை. உண்மையில், பலர் ஆணுறைகளைப் போடும்போது போராடுகிறார்கள். அதனாலேயே தவிர்த்து விடுகின்றனர். இவங்களும் எதையும் தெரிஞ்சுக்க மாட்டாங்க. அரசு சிரமம் பார்க்காமல் பணியாளர்களை ஏற்பாடு செய்தாலும், அவர்களை அடித்து விரட்டுகின்றனர். ஏன்னு கேட்டால், மனைவி முன்னாடி, மர்ம உறுப்பு மாதிரியை காட்டினால், அவங்க சங்கடமா நினைப்பாங்களாம். என்னமோ போங்க. நம்ம ஊரில் மாற்றம் வர இன்னும் பல வருடங்கள் போராட வேண்டி இருக்கும் போலிருக்கு. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts