notification 20
His & Her
அப்போ குலுக்கி தக்க தை, இப்போ குல்பி ஐஸ்சு! அந்த போட்டோவுக்கும், இதுக்கும் துளி சம்பந்தம் இருக்கா பாருங்க? கொலுக்முழுக் கொழுக்கட்டை!

ஒரு வாரத்தில் பத்து கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்னு சொல்வாங்க நம்பாதீங்க. நம்முடைய அறியாமையே அவர்களின் மூலதனம். அவங்க கொடுக்கும் ஜூஸ் குடித்தால், ஒரே மாதத்தில் மாற்றம் தெரியுமாம். வேறு எந்த பத்தியமும் தேவையில்லை. முகம் கூட, கண்ணாடி பாட்டில் மாதிரி பளபளன்னு மாறிவிடுமாம். நோகாம நோம்பி கும்பிடுவது தான் நமக்கு கை வந்த கலை ஆச்சே. நம்பி போனால், குறைந்தது 3000 ஆயிரம் ரூபாய் மொய் எடுத்துவிட்டு அனுப்பி வைப்பாங்க.

இதெல்லாம் டுபாக்கூரு உடல் எடை குறைப்பு. உண்மையா எப்படி உடல் எடையை குறைக்க முடியும் என்பதை, சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் அழகா காட்டி இருக்காங்க. எல்லா இரகசியமும் இந்த வாயில் அடங்கி இருக்கு. பிரியாவிற்கு இருபது கிலோ உடல் எடை குறைய, கிட்டத்தட்ட 5 வருடங்கள் எடுத்திருக்கு. உணவு பத்தியத்தால், இவ்வளவு எடை குறைய, இது தான் சரியான கால அளவு. ஒரு வாரத்தில் இருபது கிலோ குறைக்கிறார்கள் என்றால், யார் காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள்?

பிரியா நடிப்பை தாண்டி, வெல்னஸ் கோச்சாவும் இருக்காங்க. யோகா, உணவு முறையின் மூலம் உடல் எடை குறைப்பது பற்றி ஆன்லைனிலும், நேரடியாகவும் வகுப்புகள் எடுக்கறாங்க. பிறருக்கு நாம் அட்வைஸ் பண்ணுவதாக இருந்தால், நாம் முதலில் ஒழுக்கமா இருக்கணும்ல. அதனால் என்னுடைய உடல் எடை குறைப்பு குறித்த ஆலோசனைகளுக்கு, நானே முன்னுதாரணம் என்று சொல்லி, 2015 எடுத்த போட்டோவையும், இந்த வருடம் எடுத்த போட்டோவையும் வெளியிட்டு இருக்காங்க.

அப்போ தலுக்கு, முலுக்குன்னு உடம்பு ஒரு ஷேப்பே இல்லாமல் குண்டா இருந்த பிரியா, இன்னைக்கு ஹீரோயின் மாதிரி, குல்பி ஐஸ் கணக்கா இருக்காங்க. இந்த இடத்தில், உணவில் முறையான பத்தியத்தை கடைபிடித்த ஒரு வெல்னஸ் கோச் உடல் எடையை குறைக்கவே, ஐந்து வருடங்கள் ஆயிருக்கு என்பதை நோட் பண்ணிக்கோங்க. இனி யாராவது வந்து, ஒல்லியாகலாம்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தால், பாக்கெட்டில் உள்ள பணத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டு, பதிலடி கொடுக்கப்பாருங்க. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts