Spellbound

இவருக்கு இப்படி ஒரு ஆசையா! தனக்கு அந்த ஆசை இருப்பதை முதன் முதலில் மேடையில் கூறிய விஜய் சேதுபதி

May 17 2022 08:03:00 PM

சினிமா துறையில் எந்த ஒரு குடும்ப பின்னணியும் இல்லாமல் தனித்து நின்று தனது திறமையின் மூலம் திரையுலகில் ஜெயித்துக் காட்டியவர் விஜய் சேதுபதி. தனது சொந்த முயற்சியினால் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

vijaysethupathi kamalhasan

சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து  பின்னர் 2010ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற தமிழ் திரைப்படத்தில்  கதாநாயகனாக நடித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பினை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விக்ரம் வேதா என்ற பல்வேறு படங்களில் நடித்தார்.

சினிமா துறையில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் தனது திறமையின் மூலம் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

vijaysethupathi kamalhasan

விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பதற்கு தான் மிகவும் ஆசை பட்டதாகவும் அது தற்போது நடந்து விட்டது எனவும் மகிழ்ச்சியில் தெரிவித்தார்.

vijaysethupathi kamalhasan

கமல்ஹாசனுடன் நடித்ததை தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசனும் விஜய்சேதுபதி நிறைய படங்கள் வெளியிடுவது பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார்.