விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மோசத்திலும் மோசம் அட்ட மோசம். திரையில் விஜய் தோன்றினாலே போதும் படம் ஓடி விடும் என்ற நினைப்பு நெல்சனுக்கு. திரைக்கதையில் சுத்தமா கவனம் செலுத்தவில்லை. கதை மற்றும் திரைக்கதை மொக்கயா இருந்தாலும் பெரிய பெரிய ஸ்டார்களை வைத்து படம் எடுத்தா இலாபம் பார்த்து விடலாம் என்று சன் பிக்சர்ஸ் நினைக்கிறார்கள் போல. படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரிலீசுக்கு முன்பே 50 கோடி லாபம் ஈட்டி விட்டதாக சொல்றாங்க.
பிரச்சனை யாருக்கென்றால் படத்தை வாங்கி விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு தான். கமர்சியல் படங்களில் லாஜிக் மீறல்கள் சாதாரணம் தான் ஆனால் இந்த படத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் அள்ளி கொட்டியிருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் சுமாரான படங்களை வெளியிட்டு நஷ்டம் பார்க்கும் கம்பெனிகளாக தோன்றவில்லை. நல்லா கவனிச்சு பார்த்தா தெரியும். பீஸ்ட் படத்துக்கு புரமோஷனும் சுமார் தான்.
ஒரு வேளை வேண்டுமென்றே நஷ்டம் காண்பித்து கறுப்பை வெள்ளையாக்கும் திட்டமாக இருக்கலாம். இந்த இரு நிறுவனங்களில் எவை தோல்வி அடைந்தாலும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பே. இந்த அணுகுமுறை இன்னும் சில படங்களுக்கு தொடரலாம் என்கின்றனர் சோஷியல் மீடியா சினிமா விமர்சகர்கள். எந்த நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம் என சந்தேகம் இருக்கிறதோ, அவர்களை வைத்தே இந்த தோல்விப்படங்களை எடுத்டுவிட்டால், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.
கறுப்பு வெள்ளையாய் மாறிவிடும், அவர்கள் கேரியரும் காலி. மக்கள் மெல்ல மெல்ல அவர்களை மறந்து விடுவார்கள். ஏற்கனவே விஜயகாந்த் பிளான் பண்ணியே வெளியேற்றப்பட்டார். இப்போ விஜய் திணற ஆரம்பித்திருப்பார். இவர்களின் ஆதிக்கத்தால் நல்ல படங்கள் அதிகம் வருவது இல்லை. அந்த காரணத்தால் தான் ஒரே நாளில் அத்தனை ஸ்கிரீனிலும் வெளியிட்டு காசு வசூல் செய்து விடுகிறார்கள். படம் நன்றாக இருந்தால் என்ன, லாஜிக் எதுவும் இல்லை என்றாலும் என்ன, நடிகருக்கு, தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லை. ரசிகர்கள் தான் பாவம். படம் நன்றாக இல்லை என்று கூட சொல்லமுடியாத நிலை.