Spellbound

2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை மண்ணைக் கவ்விய நடிகர் விஜய், சுதாரித்துக்கொண்டு தப்பியது எப்படி? இது தெரியாமல் குத்துதே குடையுதேன்னு ஆட்டம் போடக்கூடாது!

May 12 2021 12:27:00 PM

அதிகம் மெனக்கெடாத ஹீரோக்கள் லிஸ்டில் நடிகர் விஜய் முதலிடம் பெறுவார். ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம், கார்த்தி போன்ற ஹீரோக்கள் மாதிரி தன்னைத்தானே செதுக்கி, உருமாற்றி, பல கேரக்டர் பரிசோதனை முயற்சி பண்ணி, தன்னை நிலைநிறுத்திக்கிட்ட நடிகர் இல்லை. பெரும்பாலும் மசாலா கலந்த திரைக்கதைகளை மட்டுமே தற்போது தேர்வு செய்து நடக்கிறார். நான்கு ஐந்து சண்டைக்காட்சிகள், வலுவான பேக்கிரவுண்ட் மியூஸிக், கெத்து காட்டும் வசனங்கள் இதெல்லாம் தூக்கிவிட்டால், தற்போதைய விஜய் படங்கள் ஓடாது.

vijay tamil-cinema new-movie

வித்தியாசமான நடிப்பை என்னைக்கும் முயற்சித்து பார்த்தது கிடையாது. தனுஷ் மாதிரி ஆட்களுக்கு எந்த கதை கொடுத்தாலும் செட் ஆகும். ஆனால் விஜய் வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்றால், அவருக்கு ஏற்ப திரைக்கதையை மாற்றம் செய்ய வேண்டும். ஓவர் பில்டப் காட்சிகளுக்கு இன்றைய இளசுகள் அடிமை என்பதால், எப்படியும் வசூலில் கல்லா கட்டிவிட முடிகிறது. கூடவே இரண்டு சென்டிமென்ட் காட்சிகளை சேர்த்தால், கொஞ்சம் பெண்கள் தரப்பையும் ஈர்த்துவிட முடியும். இதைத் தாண்டி, விஜய் படங்களுக்கு பெருசா மெனக்கெட தேவையில்லை.

vijay tamil-cinema new-movie

ஒரு குத்து பாட்டு ,நல்ல நடனம் ,பெண்களை கவரும் விதமான வசனம் , ஆ பாசம் இல்லாத நகைச்சுவை இவை அனைத்தும் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது. நடிப்பு திறமைக்காக பெரிதாக பேசப்பட்டவர் கிடையாது. உண்மையா ரிஸ்க் எடுத்து நடிக்குற நடிகர்கள் லிஸ்டில் கமல், விக்ரம், சூர்யா இருக்காங்க. அந்தக்காலத்தில் படத்திற்கு படம் ரிஸ்க் எடுத்து நடித்தவர் ரஜினி. அப்போ போட்ட உழைப்பு இன்னைக்கு, அசைக்க முடியாத உயரத்தில் கொண்டு வந்து வைத்துள்ளது.

vijay tamil-cinema new-movie

ஆக்டிங் ஸ்கோப் இல்லாத படங்களில் நடிக்கக்கூடிய தகுதி விஜயிடம் கிடையாது. 2006 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை, விஜய் படங்கள் சொதப்ப இதுவே முக்கிய காரணமாகும். போக்கிரி படம் வெற்றி கண்ட உடனே, அதே பாணியில் வரிசையாக எடுக்கப்பட்ட அத்தனை படங்களும் தோல்வி. பிறகு நண்பன், காவலன் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மீண்டும் மார்க்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இப்போ இன்டர்நெட் வளர்ச்சிக்கு பிறகு, மீண்டும் போக்கிரி பாணியிலான படங்கள் மக்களை ஈர்ப்பதால், மீண்டும் பழைய பாணிக்கு திரும்பி வெற்றி படங்களை கொடுக்கிறார். நடிப்பு திறமையை விட, போட்ட காசுக்கு, இலாபம் எடுக்க வேண்டும் என்ற பாணியிலான படங்களுக்கு விஜய் உகந்தவர்.