Daily News

படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹீரோதான்! நடித்த விளம்பரத்திற்கு சம்பளம் வாங்காமல் 50 பேருக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய சொன்ன சோனு சூட்

May 14 2022 07:36:00 PM

தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் முன்னணி கதாபாத்திரம் மற்றும் வில்லன் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் சோனு சூட். 1999ஆம் ஆண்டில் வெளியான கள்ளழகர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

actor sonusood helping

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே திரைப்படத்திலும் அடுத்தடுத்து மஜ்னு, ராஜா போன்ற பல்வேறு படங்களிலும் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படமான ஜோதா அக்பர் படத்தில்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்த 2009ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான அருந்ததி படத்தில் நடித்து நல்ல ஒரு அங்கீகாரத்தை பெற்றதோடு இந்த படத்தில் நடித்ததற்காக பல்வேறு விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் கொரோனா நோய்தொற்றினால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அந்த சமயத்தில் நடிகர் சோனு சூட் பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றார். மும்பையில் உள்ள தனது சொந்த ஸ்டார் ஹோட்டலில் ஏழை எளிய மக்கள் தங்குவதற்கு இடம்  கொடுப்பது, ஏழை விவசாயிகளுக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

actor sonusood helping

இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்று விளம்பரத்திற்காக சோனுசூட்டை  அனுகியுள்ளனர். அந்த சமயத்தில் அந்த மருத்துவமனையிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அது என்னவென்றால் தனக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு பதிலாக 50 பேருக்கு இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.

actor sonusood helping

சோனு கூறியவாறு 50 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சுமார் 12 கோடி ரூபாய் செலவாகும். இந்த அறுவைசிகிச்சை பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தற்போது அந்த திட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர். தற்போது 2 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடிக்கும் ஹீரோவாக மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார் நடிகர் சோனு சூட்.