Spellbound

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிச்சாகணும் போல! இப்படியே நடிச்சிகிட்டு இருந்தா சீக்கிரம் மூட்டையை கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியது தான்! சுதாரித்துக்கொள்வாரா சுந்தரபாண்டியன்?

Jan 06 2022 12:56:00 PM

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். இவர் படங்களுக்கு ஒரு காலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடோடிகள் 2 படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. உடன்பிறப்பே படம் ஓரளவுக்கு ரசிக்கும்படியாக இருந்தாலும் ஏற்கனவே தமிழ் சினிமாவில் சொல்லி அலுத்துப்போன பழைய கதையைத்தான் இதிலும் சொல்லியிருந்தார்கள்.

sasikumar-movies continuous-flop

கடந்த வருட இறுதியில் சசிகுமார் நடிப்பில் ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இதில் ராஜவம்சம் திரைப்படம் தியேட்டரிலும், எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் OTT யிலும் வெளியானது. இரண்டு படங்களுமே வந்த சுவடு கூட தெரியவில்லை. சுந்தரபாண்டியன் படம் வந்த நேரத்தில் அந்தப்படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது நம் எல்லாருக்குமே தெரியும். அப்படிப்பட்ட படத்தில் நடித்தவர் தான் இப்போது இதுபோன்ற சப்பைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறாரா என ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கிறது.

sasikumar-movies continuous-flop

கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன் ஆகிய படங்களில் தற்போது சசிகுமார் நடித்து வருகிறார். ஒரு சூப்பரான இயக்குனராக இருக்கும் சசிகுமார் தான் நடிக்கும் படங்களின் திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் தொடர்ந்து தோல்விப்படங்களாகவே கொடுத்து வருகிறார். அவர் நடிக்கும் படங்களின் இயக்குனர்களுடன் கலந்துரையாடி நல்ல கருத்துள்ள படங்களில் நடித்தால் அவருடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

sasikumar-movies continuous-flop

வருடத்துக்கு பல படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி தான் படிக்கும் படங்களின் கதையில் கவனத்தை செலுத்துவதில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். அதேபோல கடந்த சில ஆண்டுகளாக பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவரும் சசிகுமாரும் படத்தின் கதையில் கோட்டைவிடுவதால் அவரை நம்பி படம் எடுப்பவர்கள் பெரும் ந ஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் அந்தப்படம் சிறப்பான படமாக இருக்க வேண்டும். இந்த விசயத்தில் சசிகுமார் சுதாரித்துக்கொள்ளவில்லை என்றால் விரைவில் அவருடைய மார்க்கெட் காணாமல் போய் விடும்.