ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்வாங்க. அது அந்தக்காலத்துக்கு செட்டாகி இருக்கலாம். இப்போ முழுக்க முழுக்க ஆடை மட்டும் தான் பெருசுன்னு நினைக்கிறாங்க. பையன் எவ்வளவு தான் ஸ்மார்ட்டா இருந்தாலும் அணிந்துள்ள ஆடையை வைத்தே ஒரு சில பெண்கள் எடை போடுவாங்க. அவங்க முன்னாடியும் நீங்க ஆண்கள் கெத்தா நடந்து போக வேண்டும் என்றால், ஒரு சில மாற்றங்களை செய்தால் போதுமானது. அவை என்னென்ன என்பதை அடுத்து பார்க்கலாம்.
1. டை அணியாவிட்டால், மேல் பட்டன் போடக்கூடாது.
2. டி ஷர்ட் அணிந்தால் பேண்ட் உள்ளே டக் செய்யக்கூடாது.
3. பிளைன் வண்ணங்கள் கொண்ட பிராண்ட் இல்லாத டி-ஷர்ட் அணியலாம்.
4. இந்த மாதிரி உடைகளுடன் பேக் பேக் செட் ஆகாது.
5. ட்ராக் சூட் அணியும் பொழுது நாடா வெளியில் தெரியக்கூடாது.
6. எதையும் கையில் தாங்கிக்கொண்டு போக வேண்டாம்.
7. கண்ணாடி தலையில் அணிவதை விட ஷர்ட் மேல் அணிந்தால் ஸ்டைலா இருக்கும்.
8. டை அணிந்தால், அதன் நுனி பெல்ட் வரை வர வேண்டும்.