notification 20
HotPicks
திராட்சை சாப்பிட்டால் து ரதிர்ஷ்டம் ஓடிப்போகும்! வினோதமான முறையில் முக்கிய திருவிழாவை கொண்டாடி மகிழும் ஸ்பெயின் மக்கள்!

திராட்சை சாப்பிட்டால் து ரதிர்ஷ்டம் வராமல் தடுக்க முடியும் என்பது ஸ்பெயின் நாட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதை வைத்து தான் தங்களுடைய புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர் ஸ்பெயின் மக்கள். இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வரவிருப்பதால் தான் இந்த அரிய தகவலைப்பற்றி உங்களிடம் கூற எண்ணுகிறேன்.

Why New Year's in Spain starts with eating 12 grapes

புத்தாண்டு என்றாலே உலகம் முழுவதும் ஒரு மறக்க முடியாத கொண்டாட்டம் இருக்கும். புதிய ஆண்டை வரவேற்பதற்கு ஒவ்வொரு நாட்டை சேர்ந்த மக்களும் புதுவிதமான வழிகளை பயன்படுத்துகின்றனர். ஸ்பெயின் நாட்டை பொருத்தமட்டில் அவர்களுடைய புத்தாண்டு கொண்டாட்டம் திராட்சைகள் இல்லாமல் நடைபெறுவதில்லை.

How 12 grapes can bring you luck for the new year | wqad.com

புத்தாண்டு தினத்தன்று ஸ்பெயின் மக்கள் பலரும் வெளியில் அதிக நேரத்தை செலவிட மாட்டார்களாம். அன்றைய தினத்தில் பெரும்பாலும் வீட்டுக்குள் இருப்பதையே விரும்பும் மக்கள், வீட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் ஒரு திராட்சை பழத்தை சாப்பிடுவாங்களாம். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு நிறைவடையும் வரை மொத்தம் 12 திராட்சைகளை உண்பார்களாம்.

5 Spanish New Year's Eve Traditions | by Embassy of Spain USA |  SpainInTheUSA

இப்படி புத்தாண்டு நாளில் 12 திராட்சைகளை சாப்பிட்டு வருவது ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு வருடத்தில் இருக்கும் 12 மாதங்களை குறிக்கும் வகையில் 12 திராட்சைகளை சாப்பிடும் பழக்கம் உருவானது. புத்தாண்டு தினத்தில் இப்படி 12 திராட்சைகளை சாப்பிட்டுக்கொண்டு அதைக் கொண்டாடுவதன் மூலம் தங்கள் வாழ்வில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என்றும், துரதிர்ஷ்டம் வருடம் முழுவதும் நெருங்காமல் இருக்கும் என்றும் ஸ்பெயின் மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கை பலிக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் புத்தாண்டு தினத்தில் திராட்சைகளை சாப்பிடுவது நமக்கு இனிமையை தரும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். நீங்க புத்தாண்டை எப்படி கொண்டாட விரும்புவீங்க? கமெண்ட் வாயிலாக உங்கள் பதிலை எங்களிடம் சொல்லுங்க.

Share This Story

Written by

Logeshwaran J View All Posts