HotPicks

வீட்டில் ஜீரோ வாட்ஸ் பல்ப் மாட்டினால் கரண்ட் பில்லே கட்டத் தேவையில்லையா? அப்பாவித்தனமாக இருந்த அப்பா! நான் புரிய வைத்த உண்மை!

Nov 17 2020 08:33:00 AM

இப்போ எல்.ஈ.டி பல்ப் பிரபலமான மாதிரி, அப்போ ஜீரோ வாட்ஸ் ரொம்ப பிரபலம். குண்டு பல்ப் மாட்டி கரண்ட் பில் வந்ததை பார்த்து பயந்த சிலர், ஜீரோ வாட்ஸ் பல்ப்பை நோக்கி ஓடினர். அந்த காலகட்டத்தில், பெரும்பாலும் வயதானவர்கள் வசிக்கும் சின்ன குடிசை வீடுகளில், ஜீரோ வாட்ஸ் பல்புகளை அதிகம் பார்க்கலாம். விளக்கு வெளிச்சத்தை விட கூடுதல் ஒளி, மற்ற குண்டு பல்புகளை விட குறைவான மின் தேவையே போதும் என்பதால், மார்க்கெட்டுக்கு வந்த கொஞ்சநாளில் பெட்டி பெட்டியா விற்றுத்தீர்ந்தன அந்த வகை பல்புகள்.

bulb zero-watt current

எங்க வீட்டில் அது தான் இரவு விளக்கு. பூஜை அறை இருட்டாக இருக்கக்கூடாதுன்னு சொல்லி, அங்கு ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு வாங்கி வந்து மாட்டினார் அப்பா. இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வர மாதிரி இருந்தா, வீடு முழுக்க இதே மாட்டிக்கிலாம்ல? கரண்ட் பில்லே வராதுல? என்று அப்பாவித்தனமாக என்னிடம் கேட்டார். எனக்கு ஏற்கனவே ஜீரோ வாட்ஸ் பல்ப் பற்றி கொஞ்சம் தெரியும் என்பதால், அப்பாவுக்கு விளக்கமா எடுத்துக்கூறினேன்.

bulb zero-watt current

அப்பா, நீங்க நினைக்கிறா மாதிரி ஜீரோ வாட்ஸ் என்றால், மின்சாரத்தையே உறிஞ்சாது என்று அர்த்தம் கிடையாது. உண்மையில் இந்த மாதிரியான பல்புகள் 12 முதல் 15 வாட்ஸ் வரைக்கும் இருக்கும். இன்னைக்கு எல்.ஈ.டி பல்புகள் இதைவிடக் குறைவாக 7 வாட்ஸில் கூட கிடைக்கிறது. அப்படி இருந்தும் அதற்கு ஜீரோ வாட்ஸ் பல்ப்னு பெயர் வர ஒரு காரணம் இருக்கு. இந்த பல்ப் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில், மின்சாரம் எவ்வளவு உறிஞ்சப்படுகிறது என்ற அளவை காட்டும் அளவுமானிகள் "ஜீரோ" எனக்காட்டின.

bulb zero-watt current

அப்போது இந்த அளவுக்கு குறைந்த மின்சார அளவை அளவிடும் நுட்பம் கிடையாது. அதனால் ஜீரோ வாட்ஸ் பல்பு என்றனர். இன்னைக்கு மில்லி வாட்ஸ் வேறுபாட்டைக்கூட துல்லியமாக அளவிட முடியும். இனிமேல் ஜீரோ வாட்ஸ் பெயரை வைத்து குழப்பிக்கொள்ள தேவையில்லை. அதை விட குறைவான் வாட்ஸ் அளவு கொண்ட பல்புகள் மார்க்கெட்டில் இருக்கு. இருந்தாலும், ஜீரோ வாட்ஸ் பல்பு இப்போ பாத்ரூம் பல்புகளாக இன்னும் கிராமப்புறங்களில் தொடர்ந்து பயன்பாட்டில் தான் இருக்கிறது.