Spellbound

கமல் இந்த சமாச்சாரமா இறங்கும்போது தான் இப்படி நடக்கணுமா? மனுஷனுக்கு அங்கேயும் கெ*ட்ட நேரம் வச்சு செய்யுதே? ஒருத்தனும் கமல் ஷோவை கண்டுக்க போவதில்லை!

Jun 10 2021 07:03:00 PM

பிக்பாஸ் அடுத்த சீசன் வெகு விரைவில் வரப்போகிறது என்பதும் அதனை கமல் தான் தயாரிக்க போகிறார் என்பதும் ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் கிசுகிசுத்து கொண்டிருக்க, இன்னொரு அதிரடியான, பரபரப்பான தகவல் ஒன்று பெரிதாக டிஸ்கஸ் செய்யப்பட்டு வருகிறதாம். என்னது? பிக்பாசை விட பரபரப்பான தகவல் ஏதேனும் உண்டா என்ன?? இருக்குங்க! எல்லா இடத்திலும் 'போல செய்தல்' என்ற விஷயம் கண்டிப்பாக இருக்கும். அப்படித்தான் ஒரு விஷயம் இங்கேயும்! அதாவது அது போலவே செய்தல். விஜய் டிவியில் பிரபலமான 'குக் வித் கோமாளி' என்ற ஷோ பெரிய அளவில் பேசப்பட்டது. அதே மாதிரியான ஷோவை பிரபல முன்னணி சேனல் விஜய் சேதுபதியை தொகுப்பாளராக போட்டு பெரிய அளவில் எடுக்கப்போவதாக ஒரு டாக் இருந்தது. அதற்கான பேச்சு வார்த்தையும் விஜய் சேதுபதியிடம் நடந்தாயிற்று என கூறப்பட்டது. 

zeetv survival-show

அதேபோல் பிக்பாஸ் போன்றே ஒரு ஷோவை 'ஜீடிவி' ஒளிபரப்ப உள்ளதாம். யாரெல்லாம் இதில் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது தொடர்பான வேலை கூட முடிந்துவிட்டதாம். 'என்னது பிக்பாஸ் போன்ற ஷோவா? இப்படி பச்சையாவா காப்பி அடிப்பீங்க?' என்று தானே உங்களுக்கு தோன்றுகிறது? 
ஆனால் இந்த ஷோ கண்டிப்பாக பிக்பாசை விட சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. 

zeetv survival-show

ஏனெனில் இந்த ஷோ முழுக்க முழுக்க ஒரு தீவில் வைத்து எடுக்கப்படுகிறது. ஆள் இல்லாத தீவில் ஒரு பதினைந்து போட்டியாளர்களை விட்டுவிடுவார்கள். அவர்கள் 100 நாட்கள் அங்கு எப்படி தாக்குபிடிக்கிறார்கள் என்பது தான் ஷோ.. சர்வைவல் எனும் இந்த ஷோ உலகம் முழுக்க அறியப்பட்ட முன்னணி ஷோவாம். பல நாடுகளில் இந்த ஷோ வெற்றிகரமாக சாதனை படைந்துள்ளதால், அந்த ஷோவை இங்கு ஒளிபரப்ப ஜீடிவி அதற்கான வேலையை கையில் எடுத்துள்ளது. 

zeetv survival-show

தென் ஆப்பிரிக்கா பக்கம் உள்ள தீவு இதற்காக பேசப்பட்டு, விரைவில் ஷோவை ஆரம்பிக்கும் முனைப்பில் உள்ளார்களாம். எப்படியோ பிக்பாசை அ டித்து துவம்சம் செய்ய போகிறது ஜீடிவி ஷோ. பிக்பாஸ் கூட பாதுகாப்பான ஒருவீட்டில் மூன்று வேளையும் நல்ல உணவுகள் கொடுத்து பாதுகாப்பாக விளையாடும் கேம் ஷோ. ஆனால் இங்கு தீவு என்பதால் கண்டிப்பாக முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். கமல் பிக்பாசை தயாரிக்கும்போது தான் இப்படியொரு போட்டி எழ வேண்டுமா?