Spellbound

காற்று கூட புகமுடியாத பங்களா! தூக்கிவிட்ட ரசிகர்கள், போகிற போக்கில் திரும்பி கூட பார்க்க முடியாது! அப்படியொரு பாதுகாப்பு!

Nov 10 2020 09:28:00 PM

சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்களின் வீட்டு காம்பவுண்ட் சுவர்களை பார்த்தது உண்டா? ஆள் உயரத்தை விட இருமடங்கு பெரிதாக இருக்கும். ரசிகர்கள் போகிற போக்கில் இது தான் அந்த நடிகர் வீடாம் என பேச மட்டுமே செய்யமுடியும், வீட்டை எல்லாம் பார்க்க முடியாத அளவிற்கு காம்பவுண்ட் சுவர்கள் இருக்கும். அந்த குறிப்பிட்ட நடிகர் தெரிகிறாரா என பார்க்கலாம் என வீட்டை எட்டி பார்த்தால் வெறும் சுவர்கள் மட்டும் தான் தெரியும். ஏன் இப்படி வீடு கட்டுகிறார்கள்? சாதாரணமாக வீடு கட்டினால் ரசிகர்கள் தொல்லை வந்துவிடும் என்பதால் தான், இப்படி பாதுகாப்போடு வீடு காட்டுகிறார்களா? 

yogibabu valasaravakkam

எங்களை வாழ வைக்கும் தெய்வமே என ரசிகர்களை சொல்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் வீட்டை பார்த்திட கூட கூடாது, தொந்தரவாக இருக்கும் என வீட்டு சுவரை உயர்த்தி கட்டுகிறார்கள். இந்த ரசிகர்களும், நடிகர் வீடு என்றாலே அவர்கள் வீட்டின் முன் ஈ மொய்ப்பது போல மொய்த்து கொண்டிருக்கின்றனர்.  

yogibabu valasaravakkam

அப்படித்தான் நடிகர் யோகிபாபுவும் வளசரவாக்கத்தில் புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அதன் காம்பவுண்ட் சுவர்கள் இரும்பு கதவு போல, காற்று கூட புக முடியாத அளவிற்கு மிகவும் வலிமையானதாகவும் உயரமானதாகவும் உள்ளதாம். இதோடு புது இன்னோவா கார்கள் இரண்டை வாங்கியுள்ளாராம். நம்மில் இருந்த மனிதர், கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளார் என்பதெல்லாம் சரிதான். இருப்பினும் ரசிகர்கள், பொதுமக்கள் யாருக்கும் வீடே தெரியாதபடி காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளதை என்னவென்று சொல்வது? ரசிகர்களும் நடிகர்களும் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து அடிக்கடி அவர்கள் வீட்டு முன் கூடுவதை தவிர்க்க வேண்டும்.