Spellbound

#OMG: அட ஸ்மாக்டவுனுக்கு வந்த கொடுமையே! வரலாற்றில் இப்படியொரு WWE மேட்ச் நடந்ததில்லை!

Mar 19 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக WWE வரலாற்றில் முதல் முறையாக பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சி நடைபெற்றது இரசிகர்கள் மத்தியில் கிறுகிறுக்க செய்துள்ளது. அமெரிக்காவில் WWE நெட் வொர்க் பார்வையாளர்களை ஈர்ப்பதை குறிக்கோளாக கொண்டு குத்து சண்டை நிகழ்ச்சி நடத்தி வருகின்றது.

இதனிடையே WWE நெட் வொர்க் நடத்தும் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சி வழக்கம் போல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கொரோனா அச்சம் காரணமாக WWE வரலாற்றில் முதல் முறையாக ஸ்மாக்டவுன் நிகழ்ச்சி எவ்வித பார்வையாளர்களும் இல்லாமல் நடைபெற்றது.

WWE வீரர்கள் மட்டுமே காம்பைரிங் செய்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு விளையாடிவிட்டு சென்றனர். அரங்கு முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பி வழியும் அளவுக்கு மேட்ச் நடந்த இடத்தில், ஒரு ஈ, காக்கா கூட இல்லாமல் சண்டை போட்டது WWE வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பார்வையாளர்கள் இருக்கும் போது வெளிகாட்டும் அதே ஆக்ரோசத்தை கண் முன் நிறுத்தினர்.

Top