Misc

விராட் கோலி குடிக்கும் தண்ணீரை விட, எங்கள் வீட்டு நீரின் மதிப்பு அதிகம்! உலகின் முதல் தரமான தண்ணீர் எங்களுக்கு எப்படி கிடைக்கிறது தெரியுமா?

Sep 15 2020 01:57:00 PM

அப்பாவுக்கு நுரையீரல் ஆப்பரேசன் நடந்திருக்கு, சளி பிடிக்காம பார்த்துக்கணும். எங்கள் வீட்டை பொறுத்தவரைக்கும், தண்ணீர் மாற்றி குடித்தால் சேராது. சீக்கிரம் ஜலதோஷம் பிடித்துவிடும். ஆர்.ஓ மாட்டலாம்னு ஒரு ஐடியா. இருந்தாலும், ஆர்.ஓ வாட்டர், மினரல் வாட்டர் என்று சொல்லக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பருகுவதால் உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படுமாம். அதன் காரணமாக எலும்பு தேய்மானம், பற்கள் வலுவிழந்த நிலை போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என மருத்துவ வல்லுநர்கள் சொல்கின்றனர்.

rain-water water pure-water

சரி அதெல்லாம் வேண்டாம் என்று விட்டாச்சு. நார்மலாக பைப்பில் வரும் தண்ணீரையே கொதிக்க வைத்து கொடுக்கலாம் என்று பார்த்தால், உப்பு கரிக்குது. அப்போ தான் அம்மாவுக்கு ஒரு ஐடியா வந்தது. நான்கு பேரல் வாங்கிப்போட்டோம். மழை பெய்யும் போது கொஞ்சம் நேரம் பொறுமையாக இருப்போம். ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து மழை வந்தால், ஓட்டின் மீது இருக்கும் தூசி, குப்பை எல்லாம் அடித்துக்கொண்டு வந்து, கழிவு நீர் செல்லும் பாதையில் போட்டுவிடும்.

rain-water water pure-water

பிறகு கண்ணாடி மாதிரி தெளிந்த தண்ணீர், வீட்டின் கூர்வாயில் இருந்தும், தாழ்வாரத்தில் இருந்தும் வர ஆரம்பிக்கும். ஒவ்வொரு கூர்வாயிலும், ஒரு பேரலை வைத்துவிட்டால், பத்து நிமிடங்களில் நிறைந்துவிடும். மழை ஓய்ந்த பிறகு, பேரல் மீது வெள்ளைத்துணி கட்டி, தூசி துப்பு விழுகாத மாதிரி, பாதுகாப்பாக ஒரு மூலையில் வைத்துவிடுவோம். தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம், பேரலில் இருந்து குடத்தில் மோந்து எடுத்துவிட்டு, மீண்டும் பழையபடி மூடி வைத்துவிடுவோம்.

rain-water water pure-water

குடத்திற்கு மாற்றப்பட்ட தண்ணீரை கொதிக்க வைத்து, பித்தளை பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டால், ஆர்.ஓ வாட்டர் எல்லாம் இதற்கு முன்னால் தூசிக்கு சமம். உலகின் சுவையான குடிநீர் என்று சொல்லப்படும், சிறுவாணி தண்ணீர் தரத்துக்கு மழைநீரின் சுவை இருக்கும். தண்ணீருக்கு சுவை இல்லை என்று சிலர் கூறலாம். ஒருமுறை சுத்தமான மழை நீரை பிடித்து, கொதிக்க வைத்து குடித்து பாருங்க. அப்புறம் தெரியும். இவ்வளவு நாள் நாம் குடித்த தண்ணீரெல்லாம், என்னவென்று. பல இலட்சம் செலவு செய்து, விராட் கோலி வெளிநாட்டிலிருந்து வாங்கி குடிக்கும் தண்ணீர், இந்த தரத்துக்கு வருமா சொல்லுங்க?