His & Her

#formalstyle: வேலைக்கு செல்லும் பெண்களுக்கான ஆடை அலங்காரம் பற்றிய ஆலோசனை!

Mar 23 2020

எந்த துறையாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது ஆடை அலங்காரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. யூனிஃபார்மாக இருக்கும் பட்சத்தில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டியதில்லை. இல்லையெனில் ஆடை கவனம் இன்றியமையாதது. அப்படி பெண்கள் ஆடையை தேர்ந்தெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை 

#1. எவ்ளோ காஸ்லியான ஆடையாக இருந்தாலும், அதனை வாங்கும் போது நமக்கு சவுகரியமாக உள்ளதா என்பதை கருத்தில் கொண்டு வாங்குவது நல்லது. நம்மில் பெரும்பாலும் பார்க்க அழகாக இருந்தால் வாங்கிவிடுவோம், அது நீண்ட நேரத்திற்கு சவுகரியமானதாக உள்ளதா என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம்.

#2. அலுவலகம் குளிரூட்டப்பட்ட சூழல் என்றால், பருத்தி உடையின் நேர்த்தி சீக்கிரம் தொய்வடைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

#3. உங்களுக்கு பிடித்த நிறத்தை காட்டிலும், உங்களுக்கு பொருத்தமான நிறமாக உள்ளதா என்பதை தோழி, நண்பர்களிடம் கேட்டு தெளிவு படுத்திகொள்ளுங்கள்.

#4. உங்களது பணி கரை ஏற்படாத துறை என்றால், வெளிர்நிற ஆடையை தேர்ந்தெடுக்கலாம். சமையல், மருத்துவ துறை எனும் போது, அடர்நிறங்களை தேர்ந்தெடுக்கலாம்.

#5. இயந்திர துறையில் வேலை செய்யும் பெண்கள், பேண்ட் சட்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

#formalstyle: மேற்சொன்னவை எல்லாம் சவுகரியத்தை அடிப்படையாக கொண்டதே. ஆனால் கோவையில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர், எப்போதும் பட்டுப்புடவை உடுத்தி கொண்டு, அளவான மேக்கப் உடன், இதமான உதட்டு சாயத்துடன், பெரிய பொட்டு இட்டு, குறு புன்னகையுடன் காணப்படுவார். இவரது பணிக்கு இந்த உடை சவுகரியமானதா என தோன்றும். ஆனால் ஆரம்பத்திலே இவருக்கு பட்டுப்புடவை உடுத்தி பழகிவிட்டதால், இவருக்கு இந்த ஆடை அலங்காரம் சவுகரியமாக உணரப்படுகிறது. சோர்வடைந்து உள்ள கர்ப்பிணி பெண்கள் கூட இவரை கண்டதும், புத்துணர்வு பெறுவார்கள். மருத்துவரின் இந்த ஆடை அலங்காரமே அவருக்கு அடையாளமாக மாறியுள்ளது. இப்போது கோவை மக்கள் அவருடைய பெயரை கண்டுபிடித்து இருப்பார்கள்.                   

Top