திருமணம் முடிந்த உடன் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி குழந்தை ஏதும் இல்லையா என்றுதான். யாரும் வேண்டுமென்றே குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதில்லை. ஆணுக்கோ, பெண்ணுக்கோ உள்ள ஏதோ சில பிரச்சனைகளால் தான் குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது. பிரச்சனை யார் பக்கம் உள்ளது என்று கூட யோசிக்காமல் பெண்ணை ம லடி என்று இந்த சமூகம் முத்திரை குத்த தொடங்கிவிடுகிறது.
எப்படியோ க ஷ்டப்பட்டு குழந்தை உருவானால் அதை அந்த பெண் பாதுகாக்க எவ்வளவு க ஷ்டப்படுகிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். ஆணுக்கு வெறும் ஐந்து நிமிடம் தான். அவருடைய வேலை முடிந்துவிட்டால் பத்து மாதம் அந்த பெண் சரியாக பிடித்த உணவை சாப்பிடமுடியாமல், தூங்க முடியாமல் சி ரமப்படுகிறார். அதைப் பற்றி இந்த சமூகம் எதுவும் பேசாது. காரணம் ஆண் வேலைக்கு செல்கிறார், பெண் வீட்டில் தானே இருக்கிறார், க ஷ்டப்பட்டால் என்ன என்று சொல்வார்கள்.
பத்து மாதங்களுக்கு பிறகு அந்த குழந்தை இந்த பூமிக்கு வரும்போதும் பெண் தான் சி ரமத்திற்கு உள்ளாகிறார். சுகப்பிரசவம் என்றால் வெறும் அரைமணி நேரம் உ யிர் போகும் வ லி. அதன் பிறகு பெண்ணின் உடல் நிலை சரியான பிறகு எல்லாம் சுமுகமாக முடியும். அதுவே சி சேரியன் என்றால் வாழ்நாள் முழுவதும் அந்த பெண் க ஷ்டப்படவேண்டும்.
சி சேரியன் செய்த பெண்கள் ஒரு இடத்தில் நிம்மதியாக நீண்ட நேரம் நிற்க முடியாது, அமர முடியாது, ஒரே மாதிரி நிம்மதியாக தூங்க முடியாது. இந்த பிரச்சனை பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும். இருந்தாலும் இந்த அத்தனை வ லிகளையும் பெண் தாங்கிக்கொண்டு தன் குழந்தை இந்த பூமியை பார்க்க வேண்டும் என்று சி சேரியன் செய்ய பெண் ஒத்துக் கொள்கிறார். பெண்களை பற்றி இனியாவது நாம் பெருமை பேசவில்லை என்றால் கூட பரவாயில்லை, பெண்மையையும், தாய்மையையும் மதித்தால் போதும்.