HotPicks

முக்கால்வாசி குடைகள் ஏன் கருப்பு நிறத்திலேயே இருக்கு? ஆச்சர்யப்பட வைக்கும் 5 காரணங்கள்!

Feb 06 2020

இப்போ வேண்டுமென்றால் ஸ்டைலுக்கு பல வண்ணங்களில் குடை வரலாம். ஒரு காலத்தில் குடை உற்பத்தி முழுக்க கறுப்பு நிறத்தையே சார்ந்திருந்தது. என்ன நிறம் இருந்தால் என்ன.? நமக்கு தேவை குடை தானே என்று தப்பு கணக்கு போட்டுவிட கூடாது. குடை கறுப்பு நிறமாக இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கு. அந்த காலத்தில் அந்தஸ்தின் அடையாளமாக இருந்த குடை, இன்று வெயில், மழையில் இருந்து நம்மை காக்கும் நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட குடை பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் தயாரிக்கப்படுவது ஏன் என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

your image

#1. கறுப்புத் துணியால் செய்யப்பட்ட குடைகள் மற்ற வண்ணத் துணியால் செய்யப்பட்டதை விட வேகமாக ஈரத்தை வெளியேற்றி விடுமாம். இதனை கண்டுபிடித்த பின்னரே குடைகள், அதிக அளவில் கறுப்பு வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருகின்றன.

#2. கறுப்பு நிற குடைகளில் அதிக வெப்ப உறிஞ்சுதலின் காரணமாக ஆவியாதல் செயல்முறை வேகமாக இருக்கும். ஈராமானல் கூட எளிதில் காய்ந்து விடும்.

#3. கறுப்பு நிறத்துக்கு வெப்பத்தை உறிஞ்சும் பண்பு அதிகம். அதே சமயம் வெப்பத்தை சீராக வெளியேற்றும் பண்பும் இருப்பதால், கறுப்பு நிற குடை பிடித்து செல்லும் போது சற்று குளிர்ச்சியை உணரலாம்.

#4. கறுப்பு நிற குடை இன்னும், அதிக செயல்திறன் மிக்கதாக மாற்ற, குடைக்கு அடியில் சில்வர் நிற கோட்டிங் கொடுத்திருப்பார்கள். இது வெப்பத்தை எதிரொலிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறையாகும்.

#5. மழை நேரத்திற்கு வண்ணக்குடைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். வெயிலுக்கு பயன்படுத்துவதானால் கறுப்பு குடைகளே சிறந்தது.

குடை பிடித்து செல்வது சின்ன செய்முறையானாலும், அதற்கு பின்னால் இத்தனை இருக்கிறது.

 

Top