HotPicks

ஏன் இந்திய இரயில்கள் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கிறது தெரியுமா? 1996 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கே இந்த இரகசியம் தெரியுமாம்!

Jun 09 2021 12:29:00 PM

1994 ஆம் ஆண்டு வாக்கில், எனக்கு 10 வயது இருக்கும். எங்க வீட்டை ஒட்டியே இரயில்வே டிராக் செல்வதால், பள்ளி விடுமுறை நாட்களில் தினமும் வேடிக்கை பார்க்க கிளம்பிவிடுவேன். கண் எதிரிலேயே, தினமும் இரயில் கடந்து செல்வதை பார்த்து வளர்ந்திருந்தாலும், எனக்கு 17 வயதாகும் வரை, ஒருமுறை கூட இரயிலில் பயணித்தது இல்லை. அதனால், எப்போது இரயில் எங்கள் வீட்டை கடந்து சென்றாலும், ஆச்சர்யத்தோடு பார்க்கத்தோன்றும். அதில் பயணிக்கும் மக்களை வேற்றுகிரகவாசிகள் போல நினைத்துக்கொள்வேன்.

train blue-color train-color

அப்போதெல்லாம் இரயில் துருப்பிடித்த மாதிரி சிவப்பு கலரில் இருக்கும். 1996 ஆம் ஆண்டு திடீரென புதுசா ஒரு நிறத்தில் இரயில் எங்க வீட்டை கடந்து சென்றது. அப்போது தான் முதல் முறையாக, நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட இரயிலை பார்த்தேன். அதற்கு முன்னர், சிவப்பு நிறத்தில் பார்த்து பழகிய எனக்கு, அது புதுசா தெரிந்தது. அப்பா, அம்மாவை எல்லாம் அழைத்து, ஏதோ அதிசயம் நடந்தது போல காண்பித்தேன். அப்போதைக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட சுவாரஸ்யமாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தது.

train blue-color train-color

அப்போதைக்கு ஏன் இரயில் நிறம் நீலமாக மாறியதென தெரியவில்லை. எனக்கு 21 வயதை எட்டியபோது, அலுவலகத்தில் ஒருவர், அதற்கான காரணத்தை கூறினார். 1996 ஆம் ஆண்டிற்கு பிறகு, எல்லா இரயில்களிலும், vaccum பிரேக் பொருத்தினார்களாம். அந்த ரயில் vaccum பிரேக் பொருத்தப்பட்ட இரயில், என்ற வித்தியாசம் தெரிவதற்காக நீல நிறத்தில் வண்ணம் பூசியிருக்கின்றனர். தற்போது பெரும்பாலான இரயில்களில் vaccum பிரேக் என்பதால், நாம் பார்க்கும் முக்கால்வாசி இரயில்கள் நீல நிறத்தில் உள்ளன. 

train blue-color train-color

விரைவு இரயில், அதிவிரைவு இரயில் வண்டிகள் நீல நிறத்தில் உள்ளன. ராஜ்தானி விரைவு வண்டி இன்னும் சிவப்பு நிறத்தில் உள்ளது. ஜனசாதப்தி விரைவு இரயில் மற்றும் டூரண்டோ விரைவு வண்டி கலவையான வண்ணத்தில் காணப்படுகிறது. அந்தக்காலத்தில் இரயில்களின் நிறத்தை மாற்றும் முடிவு அப்போதைய இரயில்வே துறை அமைச்சரால் எடுக்கப்பட்டது என்பதை, சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஒருவர் அறிந்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.