Misc

எந்த வகை ஊஞ்சல் தலைமுறைகளை தாண்டி உழைக்க கூடியது? வீட்டில் தப்பித்தவறியும் அந்த இடத்தில் மட்டும் ஊஞ்சல் வேண்டவே வேண்டாம்!

Sep 14 2020 10:43:00 AM

இன்னும் சின்ன குழந்தை மாதிரி, ஊஞ்சல் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாமான்னு கேட்காதீங்க. எந்த வயதாக இருந்தாலும், உடலும், மனதும் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, எந்த நோயும் நம்மை எட்டிப்பார்க்காது. எனக்கும் வீட்டில் ஊஞ்சல் கட்ட வேண்டும் என்று ஆசை தான். இப்போது வேறு, வாடகை வீட்டில் இருக்கிறோமா, அதனால் சொந்த வீட்டுக்கு போன பிறகு, அங்கு நிச்சயம் ஊஞ்சல் இருக்கும். ஊஞ்சலில் ஆடுவது என்றால் எனக்கு அலாதி பிரியம்.

unchal oonchal home

சின்ன வயதில், மரத்தில் கயிறு கட்டி, அதில் பலகை வைத்து ஆடியது. அதற்கு பிறகு அந்த மரமும் இல்லை, மரம் இருந்த இடமும் காணாமல் போனது. இன்னைக்கு அந்த இடத்தை பார்த்தால், காம்ப்ளக்ஸ் 6 மாடி கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது. பால்ய பருவ நினைவுகளை சுமந்த இடம், அதற்கான சுவடுகளே இல்லாமல், வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. கனத்த மனதோடு அவ்விடத்தை கடந்த பிறகே, வீட்டில் ஊஞ்சல் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

unchal oonchal home

இந்த வயதில் தான் ஊஞ்சல் கட்டி ஆட வேண்டும் என்ற வரைமுறை எல்லாம் கிடையாதுங்க. நம்ம மனதுக்கு பிடித்திருந்தால், என்பது வயதை கடந்த பிறகும் கூட ஊஞ்சல் கட்டி ஆடலாம். பெரிய பெரிய வீடுகளில், அலுமினிய பைப்புகளால் செய்யப்பட்ட ஊஞ்சல்களை பார்த்திருக்கிறேன். அதில் என்னைக்குமே மன திருப்தி கிடைக்காது. மரத்தால் ஆன ஊஞ்சல் தான் என்னைக்கும் பெஸ்ட். தலைமுறைகள் கடந்து உழைக்கக்கூடியது. ரேட்டும் கமியா தான் இருக்கும்.

unchal oonchal home

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் என்ற பகுதி பிரம்பால் செய்யப்படும் பொருட்களும், பாய் வகைகளும் மிகவும் பிரபலம். அங்கு மூங்கில் பிரம்பால் செய்யப்படும் ஊஞ்சல் தமிழகம் முழுக்க கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகிறது. என்னை பொறுத்த வரைக்கும், சீப் அண்டு பெஸ்ட் ஊஞ்சல் எது என்று கேட்டால், மூங்கில் பிரம்பால் செய்யப்பட்டதைத்தான் கூறுவேன். எங்க அத்தை வீட்டில் ஒன்று இருக்கு, 15 வருடங்கள் கடந்தும் உழைத்துக்கொண்டிருக்கிறது.

unchal oonchal home

சொந்த வீடு கட்டுவதாக இருந்தால், சிறு தொகையை ஒதுக்கி, ஒரு ஊஞ்சல் அமைத்து விட்டால், மன இறுக்கம் உண்டாகும் நேரத்தில் எல்லாம், கொஞ்ச நேரம் உட்கார்ந்து தூரி ஆடினால் போதும், மனதை இறுக்கும் சிந்தனைகள் எங்கு பறந்து போகும் என்றே தெரியாது. இன்று வீட்டினுள் வைக்கும் வடிவங்களில் கூட ஊஞ்சல்கள் வந்து விட்டன. அதை வாங்கும் பட்சத்தில், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் நடுவில் அல்லது  நடைபாதையை தடுக்கும் இடத்தில் நிறுவ வேண்டாம். நல்ல வெளிச்சம் உள்ள பகுதியில் நிறுவினால், இன்னும் சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் பொழுது ஊஞ்சல் வைக்கனும்னு ஆசை பார்க்கலாம்.